நஸ்ரியாவிடம் இப்படித்தான் காதலை சொன்னேன்… 7 வருடம் கழித்து வெளியான ஃபகத் சீக்ரெட்!
தமிழ் சினிமாவில் “நேரம்”, “ராஜா ராணி” போன்ற சில திரைப்படங்களில் நடித்து இளசுகளின் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை நஸ்ரியா. க்யூட் நடிப்பினாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த இவர் பெங்களூரு டேஸ் திரைப்படத்தின் மூலம் மேலும் வரவேற்பை பெற்றார். இந்தப் படத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா திரைப்படங்களில் தோன்றுவதைத் தவிர்த்து விட்டார்.
காரணம் மலையாள நடிகரான ஃபகத் பாசிலை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் சில இளைஞர்கள் ஃபகத் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தவும் செய்தனர். தற்போது இந்த ஜோடி தொடர்ந்து சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஃபகத்தின் “மாலிக்” திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர் ஃபகத் தனது ஃபேஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் கடந்த ஆண்டு தனக்கு ஏற்பட்ட விபத்து முதற்கொண்டு நடிகை நஸ்ரியாவிடம் காதலை தெரிவித்தது வரை அனைத்து நிகழ்வுகளையும் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் “பெங்களூ டேஸ்” திரைப்படத்தில் நடிக்கும்போதுதான் நஸ்ரியாவுடன் எனது பயணம் ஆரம்பமானது. அவரிடம் மோதிரத்துடன் ஒரு கடிதம் எழுதி காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு நஸ்ரியா “ஓகே” என்று சொல்லவில்லை. ஆனால் “நோ”என்றும் சொல்லவில்லை. நஸ்ரியாவின் விடாமுயற்சியாலேயே எங்கள் காதல் திருமணம் வரை வந்தது.
தற்போது 7 ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வருகிறோம். என்னை ஒரு சிறந்த நபராக நஸ்ரியா மாற்றியுள்ளார். வாழ்க்கையை நஸ்ரியாவுடன் வாழத் தொடங்கிய பின்னர் எனது அனைத்து சாதனைகளும் அதிகமானது. நஸ்ரியாவை நான் அதிகமாக புரிந்து கொள்ளவில்லை என்றால் என் வாழ்க்கை என்னவாகி இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது’‘ எனப் பதிவிட்டுள்ளார்.
தற்போது 7 வருடம் கழித்து நஸ்ரியா- ஃபகத் பாசில் காதல் கதை சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. ஃபகத்தின் “மாலிக்” திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அவரின் “See u soon“, “ஜோஜி” திரைப்படம் அமேசான் பிரைமிலும் “இருள்” நெட்ஃபிளிக்ஸிலும் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.