தேசிய விருது பெற்ற இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்: நடிகை கஸ்தூரி இரங்கல்!.

தேசிய விருது பெற்ற இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்: நடிகை கஸ்தூரி இரங்கல்!.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து உள்ளார்

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பாக ’நானு அவனல்ல அவளு’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’கில்லிங் வீரப்பன்’ என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை ராம்கோபால்வர்மா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி பெங்களூரு அருகே இரவு சுமார் 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சஞ்சாரி விஜய் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு மூளையில் ரத்தம் உறைந்ததாக கூறப்பட்டது. பெங்களூர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சர்ஜரி செய்யப்பட்டது என்றும் அதன் பின்னரும் அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து இன்று அவர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சஞ்சாரி விஜய் மரணமடைந்ததாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்

நடிகர் சஞ்சாரி மரணம் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES