பாலிவுட்டுக்கு போகிறார் ஜெகபதிபாபு
தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு தனது இரண்டாவது இன்னிங்ஸை அருமையாக ஆடி வருகிறார். ரஜினிகாந்த், விஜய், அஜீத், மோகன்லால், மம்முட்டி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டுமா கூப்பிடு ஜெகபதிபாபுவை என்கிற அளவுக்கு பிசியான வில்லனாக வலம் வருகிறார் ஜெகபதிபாபு.
இந்தநிலையில் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் ஜெகபதிபாபு. அக்சய் குமார் நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் ஜெகபதிபாபு. ஆனால் ஆச்சர்யமாக இந்தப்படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் இல்லை என்றும் பாசமான தந்தையாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.