பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்?

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். இவரை தெலுங்கு சினிமாக்களில் அறிமுகம் செய்துவைக்க பல காலமாகவே முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த முயற்சி தற்போது நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையான சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

காரணம் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 31 ஆவது திரைப்படத்தை கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க விருக்கிறார். கேஜிஎஃப் வெற்றியைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் ஜுனியர் என்டிஆர் நடிக்க இருக்கும் அவரின் 31 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் இந்தப் படத்திற்காக நடிகை ஜான்வி கபூரை திரைப்படக்குழு அணுகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜுனியர் என்டிஆரின் நடிப்பில் அதோடு பிரசாந்த் நீல் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம் என்பதால் இந்தப் படத்தை நடிகை ஜான்வி கபூர் ஒப்புக்கொள்வார் என்றே தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.

இந்நிலையில் ஜுனியர் என்ஆடிஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் என இருபெரும் பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் ஜுனியர் என்டிஆரின் 31 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதில் நடிகை ஜான்வி கபூர் இருப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

LATEST News

Trending News

HOT GALLERIES