44 வயதில் இரண்டாவது திருமணம் - தயாரான விக்ரம் பட நடிகை

44 வயதில் இரண்டாவது திருமணம் - தயாரான விக்ரம் பட நடிகை

தமிழ் சினிமாவின் விக்ரம் நடிப்பில் வெளியான கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரேமா.

தமிழ் ஓரிரு படங்கள் மட்டுமே நடித்துள்ள இவர், கன்னட திரையுலகில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.

நடிகை பிரேமா, கடந்த 2006ஆம் ஆண்டு ஜீவன் அப்பாச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணத்தினால், விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், 44 வயதாகும் நடிகை பிரேமா 2வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும், மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஆனால், நடிகை பிரேமா இதுவரை இந்த தகவலை உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News