'அசுரன்' ரீமேக் படத்திற்காக ப்ரியாமணி எடுத்த ரிஸ்க்!
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’அசுரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி தேசிய விருதுகளையும் குவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது உருவாகியுள்ளது என்பதும் இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழில் தனுஷ் ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் தெலுங்கில் ப்ரியாமணி நடித்துள்ளார். ஏற்கனவே வெங்கடேஷுடன் பல திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அப்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவருடன் நடிக்க முடியவில்லை என்றும் ஆனால் ’அசுரன்’ ரீமேக் திரைப்படமான ’நாரப்பா’ படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தவுடன் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக ஒரு சில படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை ’நாரப்பா’ படத்திற்காக ரிஸ்க் எடுத்து கொடுத்தேன் என்றும் ப்ரியாமணி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக வெங்கடேஷுடன் நடிக்க வேண்டும் என்று காத்திருந்ததால் இந்த ரிஸ்க்கை தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் பிரியாமணி சமந்தாவுடன் நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ வெப்தொடர் இன்று ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது