முன்னணி தெலுங்கு நடிகரின் படத்தை இயக்கும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், யார் அந்த நடிகர் தெரியுமா?

முன்னணி தெலுங்கு நடிகரின் படத்தை இயக்கும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், யார் அந்த நடிகர் தெரியுமா?

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ்.

இவர் நடிகர்கள் அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தளபதி 65 படத்தை கைவிடப்பட்டதை தொடர்ந்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ஒரு பெரிய பட்ஜெட்டில் அனிமேஷன் படத்தை உருவாகி வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் அடுத்தாக தெலுங்கு முன்னணி நடிகரான ராம் போதினேனியை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்கு வந்து பின் இப்படத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News