ஷங்கர்-ராம்சரண் படத்தின் நாயகி இந்த பாலிவுட் நடிகையா?

ஷங்கர்-ராம்சரண் படத்தின் நாயகி இந்த பாலிவுட் நடிகையா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு ஒருபக்கம் தனியாக இருக்க, தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார். பான்-இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட்டை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராம்சரண் தேஜாவே ஆலியா பட்டை பரிந்துரை செய்ததாகவும், ஏற்கனவே இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகையை தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்த ஷங்கர் இதனை ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆலியா பட் ஷங்கர் - ராம்சர்ண் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ராம்சரண் தேஜா மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News