கொரோனா நோயாளிகளுக்காக பிரபாஸின் பிரம்மாண்ட படக்குழு செஞ்ச நெகிழவைக்கும் காரியம் தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்காக பிரபாஸின் பிரம்மாண்ட படக்குழு செஞ்ச நெகிழவைக்கும் காரியம் தெரியுமா?

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம்.

பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய சாஹோ திரைப்படத்தை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் பிரம்மாண்டமான தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் திரைப்படம் ராதே ஷ்யாம்.

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் பல இத்தாலி நாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் சில காட்சிகளை ஐதராபாத்தில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டு பின்னர் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்றது. முழுக்க முழுக்க காதல் ததும்பும் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வெளியீடு ஜூலை 30ஆம் தேதி என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருக்கிறது.

Simbu deep condolense for venkat prabhu premji mother demise

இந்த நிலையில் இந்தப் படத்துக்காக ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மருத்துவமனை அரங்குகள் ஹைதராபாத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளாக மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கும் பொருட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து படக்குழுவினருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

LATEST News

Trending News