பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் சுதீப்

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் சுதீப்

பிரபல கன்னட நடிகரான சுதீப், பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர்.  

 

ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர். 

 

ஆதிபுருஷ் படத்தின் பேன் மேடு போஸ்டர்

 

இந்நிலையில், பிரபல கன்னட நடிகரான சுதீப்பும், ஆதிபுருஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் விபீஷணன் வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES