அன்னையர் தின ஸ்பெஷல்... அம்மாவை நினைத்து உருகிய திரைப்பிரபலங்கள்

அன்னையர் தின ஸ்பெஷல்... அம்மாவை நினைத்து உருகிய திரைப்பிரபலங்கள்

அன்னையர் தினமான இன்று திரைப்பிரபலங்கள் பலர் தங்களது தாயாரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாற்றுக்கிழமையை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். கடந்த நூறண்டுகளாக அன்னையர் தினக்கொண்டாட்டம் பழக்கத்தில் உள்ளது. ஆனால் அம்மாவை உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு தினம், தினம் கொண்டாட்டம்தான். இன்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் சிலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்கள். 

 

தாயாருடன் கமல்

 

கமல்ஹாசன் 

 

என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே நானாகிய நதி மூலமே தாயாகிய ஆதாரமே. 

 

நடிகர் சரத்குமார் 

 

எல்லையற்ற அன்பையும் ஒப்பில்லா தியாகத்தையும் அளித்து தங்கள் குழந்தைகளையே உலகம் என நேசித்திடும் அன்னைகளுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆதரவற்ற தாய்மார்களுக்கு அவர்களது பிள்ளைகளாக இருந்து உதவுவோம். 

 

தாயாருடன் மாதவன்

 

நடிகர் மாதவன் 

 

இனிய அன்னையர் தின வாழ்த்துகள், அம்மா. இந்த உலகத்திலும், சொர்க்கத்திலும் உங்கள் அன்பு, ஆசீர்வாதத்தை விட வேறு எந்த சக்தியும் இல்லை. 

 

நடிகை ஜனனி 

 

கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும் உன்மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். 

 

தாயாருடன் ஜனனி, மகனுடன் விஜயலட்சுமி

 

நடிகை விஜயலட்சுமி 

 

கண்ணாமூச்சி விளையாட்டுல எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிட்டேன்னு சொல்றான். எப்படி நிலன்னு கேட்டா, உனக்கும் எனக்கும் இதயத்துக்கும் இதயத்துக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு அம்மா, நீங்க எங்க போனாலும் உன்னைக் கண்டுபிடிச்சிடுவேன்னு சொல்றான். தாய்மை என்பது பேரின்பம். அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள். 

 

இயக்குனர் சேரன் 

 

என் அன்னைக்கும் அன்னை போலவே அனைத்து குழந்தைகள் மீதும் அன்பு காட்டும் அனைத்து மகளிர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். 

 

தாயாருடன் சேரன், சிபிராஜ்

 

சிபிராஜ் 

 

அம்மா என்பவர் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமல்ல, அந்த குழந்தையின் முதல் ஆசிரியை, நல்ல நண்பர் மற்றும் வழிகாட்டி. அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். 

 

தேவிஸ்ரீ பிரசாத் 

 

உலகின் சிறந்த அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். ஒவ்வொரு நிமிடமும் தன்னலமின்றி, அயராது, உணர்ச்சியுடன், பாசமாக, எங்கள் கனவுகள் அனைத்தும் உண்மையாக வர அவர்களுக்கு நாம் என்ன செய்தோம். லவ் யு அம்மா. 

 

தாயாருடன் தேவி ஸ்ரீ பிரசாத்

 

வனிதா 

 

தங்கள் பிள்ளைகளை மட்டுமின்றி அனைத்து பிள்ளைகளையும் தன் சொந்த குழந்தையாகவே பார்க்கும் அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

 

யுவன் சங்கர் ராஜா 

 

இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற என தான் இசையமைத்த பாடலின் வரிகளை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் யுவன். 

 

மகள் மற்றும் அம்மாவுடன் யுவன், தாயாருடன் மாளவிகா மோகனன்

 

மாளவிகா மோகனன் 

 

அனைத்து தாய்மார்களுக்கும், என் அழகான அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். பெரும்பாலும் பெண்கள் அப்பா செல்லமாக இருப்பார்கள், ஆனால் நானோ முழுக்க முழுக்க அம்மா செல்லம் என தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES