‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக ‘அடங்காதே’ பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்தும் கொண்ட படமாக உருவாகும் இதில் சமுத்திரகனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அடங்காதே படத்தை இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படம் இன்னும் ரிலீசாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES