கொரோனா 2ம் அலை... நெருக்கமான பலரின் உயிர்களை காவு வாங்கிடுச்சு - இயக்குனர் நவீன் உருக்கம்

கொரோனா இரண்டாம் அலை சற்று பயங்கரமாக இருப்பதாக தெரிவித்துள்ள இயக்குனர் நவீன், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை சற்று பயங்கரமாக இருப்பதாக தெரிவித்துள்ள இயக்குனர் நவீன், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

 

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

கொரோனாவால் திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குனர் தாமிரா ஆகியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.

 

இந்நிலையில், மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன், கொரோனா இரண்டாம் அலை, தனக்கு நெருக்காமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “இரண்டாம் அலை சற்று பயங்கரமாகவே இருக்கிறது. முதல் அலையில் எனக்கு தெரிந்த நண்பர்கள் பலருக்கு கொரோனா வந்தது போனது. ஆனால் இரண்டாம் அலை எனக்கு நெருக்கமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. துயரோடு அதிகபடியான அச்சமும் கலந்தே இருக்கிறது. விழிப்புணர்வும் தைரியமும் தேவை. பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES