பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய நடிகர் - யார் தெரியுமா
சின்னத்திரையில் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜோடி கதிர் மற்றும் முல்லை தான்.
கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் குமரனுக்கு சின்னத்திரையில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சிரியலிலிருந்து குமரன் வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது சமீபத்தில் குமரன் செய்த பதிவு தான்.
அந்த பதிவில் " நீங்கள் அனைவரும் நிகழ்ச்சியை அனுபவித்தீர்கள் என்று நம்புகிறேன், அதில் நான் நன்றாக செய்தேன். வெற்றி அல்லது வெற்றி இல்லை என்பதை தாண்டி நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே வழியில் நீங்கள் அனைவரும் நீங்கள் பார்த்தவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது, நாம் அனைவரும் அடுத்ததில் கவனம் செலுத்துவோம் " என்று கூறியுள்ளார்.
இதனால் குமரனின் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.