இவங்க அப்பா-மகனா? அண்ணன் தம்பியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சீயான் 60’ திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி விக்ரம் அவர்களுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் விவேக்கின் மறைவு காரணமாக அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. அவரது ரசிகர்களும் அன்றையதினம் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவதில் பிசியாக இருந்ததால் விக்ரமின் பிறந்தநாளை கண்டுகொள்ளவில்லை
இந்த நிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது தாமதமாக தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருவருமே இளைஞர்கள் போல் இருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் அண்ணன் தம்பியா? என்ற கேள்வியை ஆச்சரியமாக எழுப்பி வருகின்றனர். துருவ் விக்ரம் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அச்சுஅசலாக பார்ப்பதற்கு அண்ணன் தம்பி போலவே இருக்கிறது என்றும் பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருவது விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்து வரும் கார்த்திக் சுப்புராஜ் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.