நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவி: இதயம், நுரையீரல் செயல்பாட்டிற்கு சிகிச்சை என தகவல்!
பிரபல காமெடி நடிகர் விவேக் இன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் வெளியான செய்தியின்படி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்வதற்காக எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விவேக் தற்போது நலமுடன் இருப்பதாக அவருடைய பிஆர்ஓ தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் தனது வீட்டில் குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார் என்றும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்