பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதியா இது?- குண்டாக இருந்தவர் இவ்வளவு ஒல்லியாகிவிட்டாரே
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் காஜல் பசுபதி.
அதன்பிறகு முதன்முதலாக வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்தார். அடுத்தடுத்து டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலக்க 2 என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
படங்களில் பிஸியாக நடித்துவந்த காஜல், நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்தார்.
பின் சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்தனர். சாண்டி இப்போது மறுமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
காஜல் பிக்பாஸில் வந்தபிறகு சின்ன சின்ன படங்கள் நடித்து வந்தார். மிகவும் குண்டாக காணப்பட்ட நடிகை காஜல் அகர்வால் உடல் எடை அப்படியே குறைத்துள்ளார்.
அண்மையில் அவர் உடல்எடை குறைத்த புகைப்படத்தை பதிவிட அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதோடு பலரும் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர்.