நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா?
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட சில கியூட் ஜோடிகள் உள்ளார்கள். அதில் ஒரு ஜோடி தான் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா.
இருவரும் இணைந்து உனக்கும் எனக்கும், பூலோகம் என படங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அந்த படங்கள் எல்லாமே ஹிட்டும் ஆகியுள்ளது.
அடுத்து புதிய படங்கள் மூலம் இவர்கள் இணைவார்களா என்றால் அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும், த்ரிஷாவும் நல்ல தோழிகள்.
ஆர்த்தி சில ஸ்பெஷல் சமையல் செய்து த்ரிஷா வீட்டிற்கு எல்லாம் அனுப்பி வைத்துள்ளார், அதை த்ரிஷா கூட தனது இன்ஸ்டா பக்கங்களில் பதிவு செய்திருந்தார்.