வாழ்க்கையில் நான் எடுத்த அந்த முடிவு!! நடிகை டாப்சி ஓபன் டாக்..

வாழ்க்கையில் நான் எடுத்த அந்த முடிவு!! நடிகை டாப்சி ஓபன் டாக்..

டாப்சி

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகை டாப்சி. தற்போது பாலிவுட் சினிமாவில் வெளிப்படையாக பேசும் நடிகையாக திகழ்ந்து வரும் டாப்சி, மத்யாஸ் போ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப்பின்பும் போல்ட்டான ரோல்களில் நடித்து வரும் டாப்சி, தன் கணவர் குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

 

நான் எடுத்த அந்த முடிவு

அதில், ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதைதான் உறவின் முக்கியமான பலம். பாலிவுட்டில் நுழைந்தபோது அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம். எனவே எங்களின் உறவு மீது முழு நம்பிக்கை இருக்கிறது.

வாழ்க்கையில் நான் எடுத்த அந்த முடிவு!! நடிகை டாப்சி ஓபன் டாக்.. | Taapsee Pannu Opens Up About Husband Mathias Boe

வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் மத்யாஸை வாழ்க்கை துணையாக தேர்வு செய்தது தான் ரொம்ப திருப்தியான முடிவு. அதேபோல் என் வாழ்க்கையில் கிடைத்த வரமென்றால் அது என்னுடைய குடும்பம் தான். சினிமா வாழ்க்கை நான் எதிர்பார்க்காத ஒன்று, ஆனால் மத்யாஸை நானே தேர்வு செய்தேன்.

அதனால்தான் இந்த முடிவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருடன் இருக்கும் இத்தனை வருடங்களில் அன்பு, நம்பிக்கை, பாதுகாப்பு என்று பல விஷயங்கள் வளர்ந்துள்ளன என்று பேசியுள்ளார் டாப்சி.

LATEST News

Trending News