Ram and Leela: திரை விமர்சனம்

Ram and Leela: திரை விமர்சனம்

ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து ரியோ நடிப்பில், ராமசந்திரன் கண்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள இந்த ராம் அண்ட் லீலா ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

 

கதைக்களம்

ரியோ ராஜ் எப்படியாவது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என இருக்க, அவருக்கு காதல் என்பதே செட் ஆகாமல் இருந்து வருகிறது, அந்த நேரத்தில் அவர் பெயர் கொண்ட ஒருவரே ராம் நண்பர் ஆகிறார்.

அந்த நண்பர் கொடுத்த ஐடியாவில் லோக்கல் ட்ரெயினில் தன் காதலை தேட, அங்கு லீலா என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்படுகிறது.

Ram and Leela: திரை விமர்சனம் | Ram And Leela Movie Review

 

அந்த காதல் திருமணம் வரை சென்றாலும், லீலா 6 மணிக்கு மேல் தன்னை சந்திக்க முடியாது என கண்டிஷன் போடுகிறார், அப்படி என்ன 6 மணிக்கு மேல் ரகசியம் என ரியோக்கு பெரிய கேள்வி வர, ஒரு நாள் வீட்டிற்கு சென்று இன்று தெரிந்தே ஆகனும் என கேட்கிறார்.

அங்கு லீலா குடும்பமே சொல்லும் தகவலை கேட்டு ரியோ அதிர்ச்சியில் உறைய, பிறகு ரியோ தொடர்ந்து காதலித்தாரா, திருமணம் செய்தாரா லீலாவை என்பதே மீதிக்கதை.

Ram and Leela: திரை விமர்சனம் | Ram And Leela Movie Review

படத்தை பற்றிய அலசல்

ரியோ துறுதுறு பையன், காதலுக்காக ஏங்கும் இளைஞன் என தன் கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளார், அதிலும் அவர் கொடுக்கும் சின்ன சின்ன ரியாக்ஸன் கவுண்டர் டயலாக் ஆரம்ப கால விஜய், சிவகார்த்திகேயன் அவர்களையும் நியாபகப்படுத்துகிறார்.

படத்தின் முதல் பாதி இந்த கால ட்ரெண்ட் ஏற்றார் போல் காதல், ஏக்கம் பிறகு கிடைக்கும் காதல் அந்த காதலில் பிரச்சினை என இயக்குனர் முடிந்த அளவிற்கு ஜாலியாக கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.

 

Ram and Leela: திரை விமர்சனம் | Ram And Leela Movie Review

ஆனால், பல காட்சிகள் கொஞ்சம் யதார்த்தம் மீறிய செயற்கைதனம் இருந்துக்கொண்டே இருக்கிறது, இந்த களத்தில் யதார்த்தமாகவே காமெடி காட்சிகள் நிறையை வைத்திருக்கலாம், கொஞ்சம் வலித்து திணித்த உணர்வு, ஆனாலும் பெரிதும் போர் அடிக்கவில்லை.

படத்தில் இடைவேளையில் வரும் டுவிஸ்ட், சமீபத்தில் வந்த ஒரு தமிழ் படத்தின் அப்படியே வந்த கான்செப்ட், கண்டிப்பாக அதுனாலையே ஆடியன்ஸிடம் அந்த சர்ப்ரைஸ் பேக்டர் கொஞ்சம் சறுக்கிதான் இருக்கும், இரண்டு மாத கேப்பில் ஒரே கான்செப்ட்-ல் முக்கியமாக கதையின் முக்கிய களம் என்பதால் கண்டிப்பாக இயக்குனருக்கு அதிர்ச்சி என்றாலும், அதை முடிந்தளவு புதிதாக கொடுக்க முயற்சித்துள்ளார். 

Ram and Leela: திரை விமர்சனம் | Ram And Leela Movie Review

இரண்டாம் பாதி பல குழப்பங்கள் அதற்காம தீர்வு ரியோ தன் காதலியின் உண்மை பிரச்சனையை எப்படி சொல்வார், அதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என பல கேள்விகளுக்கான விடையாகவே இரண்டாம் பாதி செல்கிறது.

ஆனால், கொஞ்சம் கூட அதில் பெரிய எமோஷ்னல் எதும் வேண்டாம் என முழுக்க காமெடியாகவே கொண்டு சென்றுள்ளனர், அதில் பாதி வெற்றியும் அடைந்துள்ளனர், சில காட்சிகள் வந்தாலும் முனிஷ்காந்த் கலக்கியுள்ளார்.

Ram and Leela: திரை விமர்சனம் | Ram And Leela Movie Review

படத்தில் எல்லோருமே கொஞ்சம் கொடுத்த காசை விட அதிகமாகவே நடித்துள்ளனர், ஆனாலும் பெரிதாக உருத்தவில்லை. டெக்னிக்கலாக பின்னணி இசை, பாடல்கள் பிரமாதம், ஒளிப்பதிவும் செம கலர்புல்லாகவே உள்ளது.

க்ளாப்ஸ்

ரியோ, ஹீரோயின், ரியோ தங்கச்சி, முனிஷ்காந்த் என எல்லோரும் நன்றாகவே நடித்துள்ளனர்.

படத்தின் இரண்டாம் பாதி

பல்ப்ஸ்

எமோஷ்னல் கனேக்ட் என பெரிதாக ஒன்றுமில்லாதது, நமக்கும் பெரிதாக எந்த காட்சிகளையும் எடுத்துகொள்ள முடியவில்லை.

மொத்தத்தில் ராம் அண்ட் லீலா பெரிய எமோஷ்னல் கனேக்ட் இல்லை என்றாலும் காமெடி ஒர்க் ஆனதால் கண்டிப்பாக ஒன் டைம் வாட்ச் தான்.

Ram and Leela: திரை விமர்சனம் | Ram And Leela Movie Review

LATEST News

Trending News