Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்

Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்

பிரித்விராஜ் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள கேங்ஸ்டர் ட்ராமாவான இந்த கலீபா ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

 

கதைக்களம்

பிரித்விராஜ் நண்பர் சமீர் முதல் காட்சியிலேயே போலிஸில் பிடிபடுகிறார், அதிலிருந்து கதை தொடங்குகிறது, பிரித்விராஜ் அப்பா சமூகத்தில் நல்ல பெயருடன் இருப்பவர்.

இவரை ஒரு ஸ்மக்லீங் செய்ய நீல் நிதின் முகேஷ் வறுபுறுத்துகிறார், அதை அவர் மறுக்கிறார். அதை தொடர்ந்து ப்ரித்விராஜ் அப்பாவை சதி செய்து தங்கம் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கிறார்கள், இதனால் கோபமான பிரித்விராஜ் தன் அப்பாவிற்காக களத்தில் இறங்குகிறார்.

ஒரு கட்டத்தில் மிகபெரிய ஸ்மக்லீங் தொழிலுக்குள் பிரித்விராஜும் வர, அவருக்கான பகை பல மடங்காக அதன் பின் இவர்களை எப்படி சமாளித்தார் என்பதே மீதிக்கதை.

Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம் | Khalifa The Ruler Movie Review

படத்தை பற்றிய அலசல்

பிரித்விராஜ் செம ஸ்டைலிஷாக நடித்துள்ளார், அதிலும் ப்ளாஸ்பேக்-ல் காட்சிகளில் அத்தனை இளமை தோற்றத்தில் அசத்துகிறார், ஸ்மக்லீங் தொழிலுக்கு சென்றவுடன் அவரிடம் ஏற்படும் மாற்றம், அவருக்கு ஏற்படும் இழப்பு, அதிலிருந்து அவர் மீண்டு வருவது என பிரித்விராஜ் ஒன் மேன் ஷொக் தான்.

அதே நேரத்தில் படத்தின் முதல் பாதி தேவையில்லாத காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க கதை நோக்கியே நகர்கிறது. ஆனால், அப்படியிருந்தும் படத்தில் பெரிய சுவாரஸ்யமில்லை, பில்டப் காட்சிகளாக மட்டுமே செல்கிறது.

Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம் | Khalifa The Ruler Movie Review

அதே நேரத்தில் இடைவேளை முன்பு கோயமுத்தூரில் ஏர்போர்ட்டில் தங்கம் கடத்தும் காட்சி, எத்தனையோ படத்தில் நாம் பார்த்து பழகி போனது போல் உள்ளது, இருந்தாலும் அந்த காட்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றது நன்றாக இருந்தது.

இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதி ஏதோ பல டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கும் என பார்த்தால், அதிலும் எந்த சுவாரஸ்யமும் இல்லை, அதே நேரத்தில் சண்டை காட்சிகள் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. அதிலும் இரண்டாம் பாதியில் ஜெயிலில் வரும் சண்டைகாட்சி மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.

Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம் | Khalifa The Ruler Movie Review

அதை தாண்டி திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு டாப் நாச், அதிலும் இரவு நேரத்தில் வரும் சண்டை காட்சி படம்பிடித்த விதம் சூப்பர், ஜாக்ஸ் பிஜாய் பாடல்கள், பின்னணி இசை மிகைப்பு ஆறுதல்.

க்ளாப்ஸ்

பிரித்விராஜ் பங்களிப்பு

ஜாக்ஸ் பிஜாய் இசை மற்றும் டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன பில்டப் காட்சி அமைப்புக்கள்.

வில்லன் கதாபாத்திரம்

இந்த மாதிரி கதைகளில் பெரிய புத்திசாலித்தனம் வேண்டும், இதுவோ நாம தான் இதை அந்த படத்திலே பார்த்துட்டோமே என்ற உணர்வை தான் தருகிறது.

மொத்தத்தில் இந்த கலீபா தி ரூலர் டைட்டிலில் மட்டுமே உள்ளது, ரசிகர்கள் மனதை ரூல் செய்ய தவறிவிட்டனர். 

Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம் | Khalifa The Ruler Movie Review

LATEST News

Trending News