Michael Box Office: மைக்கேல் ஜாக்சன் பயோபிக் இந்தியாவில் எத்தனை கோடி வசூல்?.. உலகளவில் மெகா சாதனை!

Michael Box Office: மைக்கேல் ஜாக்சன் பயோபிக் இந்தியாவில் எத்தனை கோடி வசூல்?.. உலகளவில் மெகா சாதனை!

சென்னை: அண்டனி ஃபுக்குவா இயக்கத்தில் மைக்கேல் ஜாக்சனின் மருமகன் ஜாஃபர் ஜாக்சன் நடிப்பில் ஏப்ரல் 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியான மைக்கேல் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மைக்கேல் படத்தை ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் பாராட்டி விமர்சனம் கொடுத்தாலும், உலகளவில் இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

200 மில்லியன் டாலர் அதாவது சுமார் 1800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக ஹாலிவுட்டில் உருவான 'மைக்கேல்' திரைப்படம் உலகளவில் முதல் வாரத்திலேயே 95 மில்லியன் டாலர் வசூலை ஈட்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 38 மில்லியன் டாலர் வரை இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாப் இசையுலகின் ராஜாவாக கொண்டாடப்படும் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைப் பருவம் தொடங்கி அவர் சாதனை மன்னனாக வாழ்ந்த கதை வரை முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கில் செலவு: ஏஐ டெக்னாலஜி வந்தாலும், ஹாலிவுட்டிலும் இன்னமும் சில ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக படங்களை தயாரித்து வருகின்றனர். 1800 கோடி பட்ஜெட்டில் உருவான மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படம் இதுவரை உலகளவில் 370 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக வெரைட்டி உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் பாக்ஸ் ஆபீஸ் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

மைக்கேல் ஜாக்சனை கண்முன்னாடி நிறுத்திட்டாங்க: மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படமாக உருவாகியுள்ள மைக்கேல் படத்தில் அப்படியே மைக்கேல் ஜாக்சனையே கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் அவரது மருமகன் ஜாஃபர் ஜாக்சன் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பல விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.


இந்தியாவில் வசூல் எப்படி?: ஏப்ரல் 23ம் தேதி ப்ரீமியர் திரையிடப்பட்டது. ஏப்ரல் 24ம் தேதி வெள்ளிக்கிழமையும் இந்திய ரசிகர்கள் மத்தியில் மைக்கேல் படத்துக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் 5.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. 200 மில்லியன் டாலர் வசூலை அடுத்த வாரத்துக்குள் இந்த படம் ஈட்டினால் தான் லாபத்தை பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 300 முதல் 400 மில்லியன் டாலர் வசூல் வந்தால் தான் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்றும் ஆனால், அது டவுட்டு தான் என்கின்றனர்.

Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.
 

LATEST News

Trending News

HOT GALLERIES