கொலை வழக்கில் கைதாகும் சத்யா.. அஞ்சலியால் வந்த ஆபத்து.. கெட்டி மேளம்!
சென்னை: அஞ்சலி வீட்டுக்கு வர ரகுராம் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்த விஷயம் தெரிந்து வருத்தப்படுகிறாள். மறுபக்கம், சத்யா அஞ்சலி மீட்டிங்கில் திட்டி வெளிய அனுப்பியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க சிவராமன் என்னாச்சு என்று கேட்க சத்யா நடந்ததை சொல்ல நீ பண்ணது தப்பு தானே என்று அட்வைஸ் செய்கிறார்.
அதன் பிறகு நவீன் அஞ்சலிக்கு போன் செய்து இன்னைக்கு நைட்டு இன்வெஸ்டர்ஸ் கூட டின்னர் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்.. நீ கண்டிப்பா வந்துடு அந்த சத்யாவை மட்டும் கூட்டிட்டு வராத என்று சொல்கிறான்.பிறகு இரவு நேரத்தில் அஞ்சலி வெளியில் கிளம்ப லட்சுமி இப்ப எங்க போற என்று கேட்க, முக்கியமான மீட்டிங் போறேன் என்று சொல்கிறாள். சிவராமனும் கேட்க முக்கியமான மீட்டிங் போவதாக சொல்லி நவீன் வீட்டுக்கு வருகிறாள். அஞ்சலியை பின் தொடர்ந்து வந்த மகேஷ் இதை பார்த்து டென்ஷன் ஆகிறான். நவீன் போதையில் அஞ்சலியிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான்.
கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில், அஞ்சலி நவீனை பிடித்து தள்ளிவிட்டு இங்கிருந்து ஓடி வருகிறாள். கேரேஜ்க்கு ஓடி வந்த அஞ்சலியை பார்த்து பதறிப்போன சத்யா என்னாச்சு என்று கேட்க, அஞ்சலி கண்ணீருடன் நவீன் என்னிடம் தவறாக நடந்து கொண்ட விஷயத்தை சொல்ல, சத்யா அவனை கோபமாக அடிக்க அங்கிருந்து கிளம்ப அஞ்சலி தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் சத்யா அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

நவீனை கொன்ற சத்யா: நவீன் வீட்டுக்கு வந்த சத்யா, நவீனை அடித்துவிட்டு, இனி மேல் அந்த வீட்டு பக்கம் வந்தே அவ்வளவு தான் என சொல்லிவிட்டு செல்கிறான். பின் நவீனை பார்க்க வந்த மகேஷ், என்ன ஆச்சு யார் உன்னை அடிச்சா என்று கேட்க சத்யா தான் என்னை அடித்தான். நான் அஞ்சலியிடம் பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால், அஞ்சலிக்கூட பேசக்கூடாது என்று சொல்லி என்னை அடித்தான் என மாற்றி சொல்கிறான். அவன் ஏன் அப்படி சொன்னான் என்று மகேஷ் கேட்க, அஞ்சலியை சத்யா காதலிப்பதால் என்னை அடித்துவிட்டான் என சொல்கிறார்.
அதோடு மட்டுமில்லாமல், கல்லூரியில் படிக்கும் போதே எனக்க அஞ்சலி மேல ஆசை, சரக்கு அடித்து இருந்ததால், தப்பா நடந்து கொண்டேன் என்று சொல்கிறான். இதனால், கோவம் தலைக்கு ஏறிய மகேஷ் நவீனை அடித்து கொன்றுவிடுகிறான். அடுத்த நாள் காலையில் மகேஷ் கொலை செய்யப்பட்டு கிடக்க இதற்கு காரணம் சத்யா தான் எனது அவனை போலீசார் அவனை கைது செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.