ஆணாதிக்க மாமனார் vs மருமகள்.. தொடங்கிய பிரச்சனை! அழகே அழகு அடுத்த வார ப்ரோமோ

ஆணாதிக்க மாமனார் vs மருமகள்.. தொடங்கிய பிரச்சனை! அழகே அழகு அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் தொடங்கிய சில காலத்திலேயே ரசிகர்களை அதிகம் கவர தொடங்கி இருக்கிறது. அதில் மாமியார் வீட்டில் இரண்டு மருமகள்கள் படும் கஷ்டங்களை காட்டி வருவது தான் அதற்கு காரணம்.

பெண்களை ஏளனமாக நடத்தும் வீட்டில் புது மாடர்ன் மருமகள் மதி எதிர்த்து கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறார்.

அடுத்த வார ப்ரோமோ

வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, சாப்பிட விரும்பாததை எல்லாம் அவர்கள் தட்டுக்கு வெளியில் தூக்கி வைக்கிறார்கள். அதை கையால் எடுத்து சுத்தம் செய்ய வேண்டியதை பார்த்து மதி கொந்தளிக்கிறார்.

அதனால் சாப்பிடும் போது எல்லோருக்கு அருகிலும் ஒரு தட்டு கொண்டு வந்து வைக்கிறார். ஆனால் நான் சம்பாதித்து கட்டிய வீட்டில் தரையில் கருவேப்பிலை வைக்க கூட உரிமை இல்லையா என மாமனார் ஆணாதிக்க மனநிலை உடன் மோசமாக பேசுகிறார்.

அதனால் மாமனார் vs மருமகள் இடையே மோதல் பெரிதாகி இருக்கிறது. ப்ரோமோவை பாருங்க. 

 

LATEST News

Trending News

HOT GALLERIES