Love Insurance Kompany: திரை விமர்சனம்

Love Insurance Kompany: திரை விமர்சனம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் Love Insurance Kompany. தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரங்களில் ஒருவராக மாறி வரும் பிரதீப் நடிப்பில் இதுவரை வெளிவந்த மூன்று படங்களும் ரூ. 100 கோடி வசூல் செய்தன.

இதனால் LiK படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உருவானது. அதுவும் விக்னேஷ் சிவன் - பிரதீப் கூட்டணி என்பதால் அந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பு ஆகியுள்ளது. அத்தகைய எதிர்பார்ப்பை LiK பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

2040-ல் LiK கதை உருவாகியுள்ளது. காதலிக்கும் ஒவ்வொரு ஜோடியும் எஸ்.ஜே. சூர்யா கண்டுபிடித்த LiK என்கிற App-ல் இணைந்திருக்கின்றனர். காதலனோ அல்லது காதலியோ அவரவர் ஜோடிக்கு உண்மையாக இல்லை என்றால் உடனடியாக இந்த App மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் உடனடியாக பிரேக் அப் செய்துகொண்டு பிரிந்துவிடுகின்றனர். 

போனில் அனைவரும் மூழ்கி கிடைக்க, போனை பயன்படுத்தவே முடியாத பசுமை உலகம் என்கிற இடத்தை நடத்தி வருகிறார். சமூக வலைத்தளம் மூலம் தவறு செய்பவர்களுக்கு தண்டனையாக இந்த இடம் இருக்கிறது. சீமானின் மகனாக என்ட்ரி கொடுக்கும் பிரதீப், கீர்த்தி ஷெட்டியை பார்த்தவுடன் முதல் முறையாக காதலில் விழுகிறார்.

Love Insurance Kompany: திரை விமர்சனம் | Love Insurance Kompany Movie Review

ஆனால், கீர்த்தி ஷெட்டியுடன் பேசவேண்டும், அவரை காதலிக்க வேண்டும் என்றால் பிரதீப்பிற்கு LiK போன் தேவைப்படுகிறது. தனது தந்தைக்கு தெரியாமல், போன் வாங்கி அதில் LiK App மூலம் கீர்த்திக்கு request அனுப்புகிறார் பிரதீப். பின், அந்த request-ஐ கீர்த்தி Accept செய்ய, இருவரும் பேசி பழக ஆரம்பிக்கிறார்கள். இது ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது.

இந்த சமயத்தில் எஸ்.ஜே. சூர்யா தனது LiK App-ல் புதிதாக லவ் மீட்டர் என்கிற அப்டேட்டை அறிமுகம் செய்கிறார். இந்த அப்டேட் மூலம், ஒவ்வொரு காதல் ஜோடிக்கும் இடையே எவ்வளவு சதவீதம் காதல் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். இதனை செக் செய்யும் ஜோடிகளில் பலருக்கும் 40% சதவீதத்திற்கும் கீழே காட்டியதால், பலரும் பிரேக் அப் செய்துவிட்டு பிரிந்துவிடுகின்றனர்.

 

Love Insurance Kompany: திரை விமர்சனம் | Love Insurance Kompany Movie Review

இந்த நிலையில், கீர்த்தி ஷெட்டி - பிரதீப் இருவரும் தங்களது காதல் சதவீதத்தை செக் செய்கிறார்கள். இவர்களுக்கு வெறும் 3% சதவீதம் மட்டுமே அந்த App-ல் காட்டுகிறது. இதனால் பிரதீப்பை பிரேக் அப் செய்கிறார் கீர்த்தி. ஒரு App எப்படி என்னுடைய காதலுக்கு சதவீதம் தரமுடியும், அதெல்லாம் பொய், LiK App ஒரு டுபாக்கூர் என நிரூபித்து காட்டுகிறேன் என சபதம் எடுக்கிறார். இதில் அவர் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். ஆனால், அவருடைய நடிப்பு நம்மோடு கனெக்ட் ஆகவில்லை.

வில்லனாக வரும் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். தனக்கு எப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும், அதை தனது நடிப்பால் மிரட்டிவிடுவார். மற்றவர்களில் இருந்து எப்போதுமே தனியாக தெரிவார். படத்தின் வெற்றிக்கும் இவருடைய பெர்பார்மென்ஸ் உதவும். ஆனால், இப்படத்தில் அவருடைய ரோல் அந்த அளவிற்கு இல்லை.

Love Insurance Kompany: திரை விமர்சனம் | Love Insurance Kompany Movie Review

இவர்களுடன் இணைந்து க்ரீத்தி ஷெட்டி, சீமான், கௌரி கிஷன், ஷா ரா, யோகி பாபு ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தது. ஆனால், அவர்களுடைய கதாபாத்திரம் நம்மோடு கனெக்ட் ஆனதா என்றால், அது கேள்விக்குறிதான்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட கதைக்களம் புதிதாக இருந்தது. அதற்கு முதலில் பாராட்டுக்கள். விக்னேஷ் சிவன் எப்போதுமே தனது திரைப்படங்கள் மூலம் பாசிட்டிவான விஷயங்களை பேசுவார். அதே போல், இப்படத்தில் ரீல்ஸ் மட்டும்தான் உலகம் என போனில் மூழ்கி கிடைக்கும் தலைமுறையை பற்றியும், அதிலிருந்து வெளியே வந்தால் எவ்வளவு அழகான உலகம் இருக்கிறது என்பதையும் பேசியுள்ளார். அதுதான் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

 

Love Insurance Kompany: திரை விமர்சனம் | Love Insurance Kompany Movie Review

ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு, கதாபாத்திரங்கள் வலுவாக இல்லாதது, எமோஷ்னல் கனெக்ட் ஏற்படாதது என பல விஷயங்களில் விக்னேஷ் சிவன் சொதப்பிவிட்டார். குறிப்பாக எப்போதுமே எமோஷ்னலாக நம்மோட கதாபாத்திரங்களை கனெக்ட் செய்வதில் விக்னேஷ் சிவன் ரைட்டிங் சிறப்பாக இருக்கும். அதை இப்படத்தில் செய்ய தவறியதே பெரிய வருத்தம். அதே போல், நகைச்சுவை காட்சிகளும் பெரிதளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.

படத்தின் ஹீரோ பிரதீப் ஆனால், அனிருத்தான் இப்படத்தின் ரியல் ஹீரோ என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தனது பாடல்களால், பின்னணி இசையால் நம் மனதை தொடுகிறார். குறிப்பாக எனக்கென யாரும் இல்லையே, தீமா தீமா, அடாவடி ஆகிய பாடல்கள் எல்லாம் வேற லெவல்.

 

Love Insurance Kompany: திரை விமர்சனம் | Love Insurance Kompany Movie Review

டெக்கனிக்கல் ஒர்க்ஸ் நன்றாக இருந்தது. குறிப்பாக 2040-ல் சென்னையை காட்டிய விதம் விஷுவலாக அனைவரையும் கவர்கிறது. அதில் செய்யப்பட்ட சின்ன சின்ன டீடைலிங்கும் ரசிக்கும்படியாக இருந்தது.

பிளஸ் பாயிண்ட்

அனிருத்

விஷுவல்

நடிகர்களின் பங்களிப்பு

கதைக்களம்

மைனஸ் பாயிண்ட்

சுவாரஸ்யம் குறைவான திரைக்கதை

எமோஷ்னலாக கனெக்ட் ஆகாத விஷயங்கள்

மொத்தத்தில் Love Insurance Kompany எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆறுதல் அளிக்கிறது. 

Love Insurance Kompany: திரை விமர்சனம் | Love Insurance Kompany Movie Review

LATEST News

Trending News

HOT GALLERIES