The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம்

The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம்

ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள அனிமேஷன் திரைப்படமான The Super Mario Galaxy Movie எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா. 

The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம் | The Super Mario Galaxy Movie Review

கதைக்களம்

அவுட்டர் ஸ்பேஸ் இளவரசியான ரோசலினா தனது ஸ்டார் குழந்தைகளுக்கு பெட் டைம் கதைகளைக் கூறி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒருநாள் கூபாஸின் அரசனான பௌசர் ஜூனியர் தனது படைகளுடன் வந்து இளவரசி ரோசலினாவை கடத்தி செல்கிறார்.

அவருக்கு மஸ்ரூம் கிங்டத்தில் இளவரசி பீச்சின் சிறையில் இருக்கும் தனது அப்பா பௌசரை மீட்க வேண்டும் என்பதே லட்சமாகும். அதற்காக இளவரசி ரோசலினாவை சிறை வைக்கிறார். மறுபுறம் மரியோ, லூய்கி சகோதரர்கள் யோஷி என்ற குட்டி டைனோசரை மீட்க, அது அவர்களுடன் நண்பர்களாகி பயணிக்கிறது.

 

The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம் | The Super Mario Galaxy Movie Review

இந்த சூழ்நிலையில் ஒரு ஸ்டார் மஸ்ரூம் கிங்டத்திற்கு வந்து தங்கள் இளவரசியை கடத்தி சென்றுவிட்டார்; அவரை காப்பாற்றுங்கள் என்று பீச்சிடம் உதவி கேட்க அவர் மரியோ, லூய்கிக்கு கடிதம் எழுதிவிட்டு சென்றுவிடுகிறார். இதனால் மஸ்ரூம் கிங்டத்தை பாதுகாக்கும் பொறுப்பை மரியோ சகோதரர்கள் ஏற்கின்றனர்.

ஆனாலும் இளவரசி பீச்சிற்கு உதவியாக இருவரும் பயணிக்க முடிவெடுக்கின்றனர். அதன் பின்னர் பௌசர் ஜூனியரின் திட்டம் என்ன ஆனது? இளவரசி ரோசலினை பீச் மற்றும் மரியோ சகோதரர்கள் மீட்டர்களா என்பதே மீதிக்கதை. 

The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம் | The Super Mario Galaxy Movie Review

படம் பற்றிய அலசல்

சூப்பர் மரியோ வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு 2023யில் வெளியாகி சக்கைபோடு போட்ட அனிமேஷன் திரைப்படம் The Super Mario Bros. Movie. அப்படத்தை இயக்கிய ஆரோன் ஹோர்வத் மற்றும் மைக்கேல் ஜெலெனிக் ஆகியோர்தான் The Super Mario Galaxy Movie திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.

முற்றிலும் குழந்தைகளை கவரும் வகையில் படத்தை எடுத்திருந்தாலும், 90s கிட்ஸிற்கு மிகவும் பிடித்தமான வீடியோ கேம் என்பதால் அவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என ட்விஸ்ட்ஸ் வைத்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

 

The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம் | The Super Mario Galaxy Movie Review

கடந்த பாகத்தின் தொடர்ச்சியாகவே படம் ஆரம்பிக்க, அவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தின் அரசனாக இருந்த பௌசர் வைக்கப்பட்டிருக்கும் சிறை செம காமெடி. அதிலும் அவர் திருந்திவிட்டதாக கூறி மரியோ சகோதரர்களிடம் கூறும்போது, ஐயோ! அப்படிப்பட்ட வில்லனுக்காக இந்த நிலைமை என்று முதல் பாகத்தைப் பார்த்தவர்களுக்கு தோன்ற வைக்கும்.

இளவரசியிடம் மரியோ காதலை சொல்ல நினைக்கும் நேரத்தில் அவர் ரோசலினாவை மீட்க சென்றுவிடுவது ஹாலிவுட் காதல் படங்களின் டச். இரண்டு மூன்று உலகங்களில் கதாபாத்திரங்கள் பயணிப்பது, சாகசங்கள் செய்வது என படம் முழுக்கவே ரோலர் கோஸ்டர் ரைடுதான்.

 

The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம் | The Super Mario Galaxy Movie Review

மரியோ சகோதரர்கள் இளவரசி இல்லாத நிலையில், ராஜ்ஜியத்தில் நடக்கும் பிரச்சனைகளை சரியும் செய்யும் காட்சி செம. மிரட்டலான வில்லனாக பௌசர் ஜூனியர் பயமுறுத்த, அவரது அப்பாவான பௌசர் மகன் உருவாக்கிய ராஜ்ஜியத்தை பார்த்து வியந்தாலும், இந்த கதாபாத்திரம் எப்போது மீண்டும் வில்லனாக மாறும் என்று நம்மை திக்-கிட வைக்கும். ரோசலினாவை மீட்க இளவரசி பீச் சண்டையிடும் காட்சிகள் மிரட்டல்.

அதேபோல் மரியோவின் போராட்டம் சம்பந்தமான சண்டைக்காட்சிகளும் சிறப்பு. உண்மையில் பீச் யார் என்ற கேள்விக்கு இப்படத்தில் விடை கிடைக்கிறது. அதேபோல் இன்னும் ஒன்றிரண்டு ட்விஸ்ட் அட என்று சொல்ல வைக்கின்றன.

 

The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம் | The Super Mario Galaxy Movie Review

படம் முடிந்த பின் ஒரு எண்ட் கிரெடிட் காட்சி உள்ளது; அதை தவறவிடாதீர்கள். என்றாலும் யோஷியை மரியோ சகோதாரர்கள் அழைத்து வரும் காட்சி, கதைக்கு தேவையில்லாத ஆணி போல் தோன்றுகிறது.

அதேபோல் ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும், ஒட்டுமொத்த படமாக ஜாலி என்டர்டைன்மெண்ட்தான். பின்னணி இசை, 3D அனிமேஷன் ஆகியவை சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ளன. கிறிஸ் பிராட், அன்யா டெய்லர்-ஜாய் போன்ற நடிகர்கள் இம்முறையும் தங்களது குரல் மூலம் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

க்ளாப்ஸ்

திரைக்கதை

3D அனிமேஷன்

ட்விஸ்ட்

பின்னணி இசை

பல்ப்ஸ்

யோஷி கதாபாத்திரத்துடன் பயணிக்கும் ஒன்றிரண்டு காட்சிகள் நெருடல்

மொத்தத்தில் இந்த The Super Mario Galaxy Movie-வை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் கொண்டாடலாம். கண்டிப்பாக திரையரங்கில் ரசிக்கலாம்.

The Super Mario Galaxy Movie: திரை விமர்சனம் | The Super Mario Galaxy Movie Review

LATEST News

Trending News

HOT GALLERIES