2வது திருமணம்..என்னை தவிர எல்லோரும் ஆசைப்படுகிறாங்க!! கோபத்தில் நடிகை மீனா..

2வது திருமணம்..என்னை தவிர எல்லோரும் ஆசைப்படுகிறாங்க!! கோபத்தில் நடிகை மீனா..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90ஸ் காலக்கட்டத்தில் டாப் ஹீரோயினாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் மற்றும் படங்களிலும் நடித்தும் வருகிறார்.

கடந்த 2024ல் அவரது கணவர் வித்யாசாகர் இறந்தப்பின் தன் மகளுடன் வாழ்ந்து வரும் மீனா, இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற தகவல் எல்லாம் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

2வது திருமணம்..என்னை தவிர எல்லோரும் ஆசைப்படுகிறாங்க!! கோபத்தில் நடிகை மீனா.. | Actress Meena Bold About Second Marriage Rumours

இதுகுறித்து பல முறை மீனா கோபப்பட்டு விளக்கம் அளித்த நிலையில், சீக்ரெட் ஸ்டோரீஸ் ரோஸ்லின் என்ற படத்தில் நடித்துள்ளது பற்றி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.

அதில், இந்த தொடரில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக தைரியமாக அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ரோலில் நடித்துள்ளேன். இது ஒரு திரில் கதை என்பதால் திரில்லர் கதைகளில் இருப்பது போன்ற ட்விஸ்ட், திகிலூட்டும் காட்சிகள் என அனைத்தும் இருக்கிறது. இக்கதையை கேட்டதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

இதனையடுத்து பேசிய மீனா, இப்போது வரைக்கும் என்னுடைய 2வது திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முன்பு இதுபோல் பல வதந்திகள் வரும் அதையெல்லாம் என்னுடைய காதுக்கு வரவேவராது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஒரு செய்தி வந்துவிட்டால் போதும், அதே வகையில் பல செய்திகள் வருகிறது. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவளும் இதுபோன்ற செய்திகளை எல்லாம் பார்ப்பார் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

2வது திருமணம்..என்னை தவிர எல்லோரும் ஆசைப்படுகிறாங்க!! கோபத்தில் நடிகை மீனா.. | Actress Meena Bold About Second Marriage Rumours

அவர்கள் சொல்லும் விஷயத்தில் உண்மை இருந்தால் பரவாயில்லை. ஆனால் எதுவுமே தெரியாமல் நான் ஒரு ஒரு நடிகை, பெண் என்பதால் கேட்பதற்கு ஆளில்லை என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் வருத்தமாகவும் ஆத்திரமாகவும் இருக்கிறது. அச்செய்தியில் உண்மை இருந்தால், எழுதுவதில் தவறில்லை. ஆமாம், உண்மைதான் என நானே சொல்லிவிடுவேன். ஆனால் இதில் உண்மை இல்லாதபோது நேரில் பார்த்தது போல் எழுதுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நான் கர்மாவை நம்புகிறேன், கர்மா அவர்களை சும்மாவிடாது, ஏனென்றால், என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு என்ன செய்தார்கள். அதனால் அவர்கள் என்ன அனுபவித்தார்கள் என்பதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன், இதற்கு மேலும் அதை நான் பார்ப்பேன். திடீரென இணையத்தில் மீனாவுக்கு 2வது திருமனம் என்று செய்தி வரும். ஒரு செய்தியை பார்த்து பலரும் அதேபோல் செய்திகளை போடுவார்கள். பின் அவர்களே நிறுத்திவிடுவார்கள்.

2வது திருமணம் வேண்டுமா? திருமணத்தைப் பற்றி நன் என்ன நினைக்கிறேன் என்பதை நான் தான் வெளியில் சொல்ல வேண்டும். ஆனால் என்னைத்தவிர அனைவரும் என்னுடைய திருமணத்தை பற்றி பேசுகிறார்கள். எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள் என்று கோபத்துடன் மீனா பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News