அடுத்தவன் ஃபீலிங்ஸ்ஸ கிரிஞ்சா பாக்குறது தான் இப்போ ட்ரெண்ட்டே!! Dude - Trailer..
லவ் டூடே, டிராகன் போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்ட இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், டியூட் என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார்.
இயக்குநர் கீர்த்தி சரவணன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், டிராவிட் செல்வம், நேஹா செட்டி, ரோஹினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் தற்போது யூடியூப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அதில், பிரதீப் ரங்கராஜன் சொல்லும் அடுத்தவன் ஃபீலிங்ஸ்ஸ கிரிஞ்சா பாக்குறது தான் இப்போது ட்ரெண்ட் என்று கூறுவதை வைத்து நெட்டிசன்கள் படம் 2கே கிட்ஸுக்கு பிடிக்குமா பிடிக்காதோ என்று கூறி வருகிறார்கள்.