படுக்கையை பகிர்ந்தால் வாய்ப்பு!! தமிழ் இயக்குநரால் பதறிய பிரபல நடிகை சுர்வீன் சாவ்லா..

படுக்கையை பகிர்ந்தால் வாய்ப்பு!! தமிழ் இயக்குநரால் பதறிய பிரபல நடிகை சுர்வீன் சாவ்லா..

தமிழில் மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள், ஜெய்ஹிந்த் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுர்வீன் சாவ்லா.

2015ல் அக்‌ஷய் தாக்கர் என்பவரை இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு 2 ஆண்டுகளுக்கு பின் ட்விட்டரில் தனக்கு திருமணமாகிவிட்டதாக அறிவித்தார்.

படுக்கையை பகிர்ந்தால் வாய்ப்பு!! தமிழ் இயக்குநரால் பதறிய பிரபல நடிகை சுர்வீன் சாவ்லா.. | Surveen Chawla Opens How Faced Worst Casting Couch

திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வரும் சுர்வீன் சாவ்லா, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் காஸ்டிங் கோச் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், பாலிவுட் இயக்குநர் ஒருவர் திருமணமான புதிதில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாவகவும் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறியிருந்தார்.

பாலிவுட் ஆடிஷனுக்கு சென்றபோது படத்தின் இயக்குநர் திருமண வாழ்க்கை எப்படி போகிறது, உங்கள் கணவர் என்ன செய்கிறார் என திருமணம் பற்றி நன்றாக பேசிக்கொண்டிருந்தார். நானும் அவரது கேள்விக்கு பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது திடீரென கதவருகே என்னை வழிவறித்து முத்தம் கொடுக்க பாய்ந்துவிட்டார். நான் உடனடியாக அதை தடுத்துவிட்டு அந்த படமே வேண்டாம் என்று அங்கிருந்து சென்றுவிட்டேன்.

படுக்கையை பகிர்ந்தால் வாய்ப்பு!! தமிழ் இயக்குநரால் பதறிய பிரபல நடிகை சுர்வீன் சாவ்லா.. | Surveen Chawla Opens How Faced Worst Casting Couch

மேலும் தென்னிந்திய சினிமாவில் தமிழ், கன்ண்டம், தெலுங்கு மொழிகளில் நான் நடித்துள்ளே. தென்னிந்திய இயக்குநர் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியாது, இந்தியும் தெரியாது.

அவருடைய நண்பர் ஒருவர்தான் அவருக்கு டிரான்ஸ்லேட்டர். படத்தில் நடிக்க வேண்டுமென்றால் தன்னுடன் படுக்க வேண்டும் என்று அவர் சொல்ல, அந்த நபர் தயங்கியபடி டிரான்ஸ்லேட் செய்ததும் ஷாக்காகிவிட்டேன். அதற்கும் நோ சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

இப்படித்தான் பல பட வாய்ப்புகள் இழந்தேன், சினிமாவில்நடிகைகளுக்கு சாதகமான சூழல் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை என்று சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News