கன்றாவி.. என்ன கருமம் இது? Thug Life திரிஷா, கமல்ஹாசன் உறவு முறை? வெடித்த சர்ச்சை!

கன்றாவி.. என்ன கருமம் இது? Thug Life திரிஷா, கமல்ஹாசன் உறவு முறை? வெடித்த சர்ச்சை!

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது. 

இப்படத்தில் கமல்ஹாசனுக்கும், திரிஷாவுக்கும் இடையேயான உறவு குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. 

சமீபத்தில் வெளியான ‘சுகர் பேபி’ பாடலில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் தோன்றியதால், 30 வயது வித்தியாசம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. 

இந்நிலையில், திரிஷா கமல்ஹாசனால் தத்தெடுக்கப்பட்ட மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை அறிந்த ரசிகர்கள், “என்ன கன்றாவி இது?” என விமர்சித்து, கதாபாத்திரங்களின் உறவு குறித்து குழப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ‘சுகர் பேபி’ பாடலில் திரிஷாவின் கவர்ச்சியான தோற்றமும், கமலுடனான நெருக்கமான காட்சிகளும் இந்த ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளன. 

இருப்பினும், படக்குழு இது குறித்து எந்த உறுதியான அறிவிப்பையும் வெளியிடவில்லை. படம் ஜூன் 5, 2025 அன்று வெளியாகும்போது மட்டுமே இவர்களின் உறவு குறித்த உண்மை தெரியவரும். 

இந்த சர்ச்சையும், வைரல் தகவலும் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், தக் லைஃப் காய்ச்சலின் சூட்டையும் அதிகப்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News