60 வயசு கிழவன் என்ன Adjustment-க்கு கூப்பிட்டான்!! சீரியல் நடிகை ரிஹானா..

60 வயசு கிழவன் என்ன Adjustment-க்கு கூப்பிட்டான்!! சீரியல் நடிகை ரிஹானா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ரிஹானா. பல சீரியல்களில் நடித்து வரும் ரிஹானா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 

சில ஆம்பளைங்க மனசுல அலைபாய விட்டுட்டு திரியிறாங்க, ஆனால் பொண்ணுங்க தான் பொறுப்பா இருந்துக்கணும். நடிகரோ, இயக்குநரோ உங்களை தனியாக காஃபி ஷாப் போலாம்ணு கூப்பிட்டால் என்னால் தனியாக வரமுடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். 

மேலும், நர்சிங் வேலை செய்யும் போது ஒரு வீட்டிற்கு அவுஸ் கேரிங் வேலைக்கு சென்று வயதானவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டும். அப்போது, 60 வயது இருப்பவர் என்னிடம், உனக்கு என்ன கமிட்மெண்ட்? எதுக்கு வேலைக்கு வரன்னு கேட்டார். 

எனக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள், அதற்கு நகை எடுக்கணும் அதற்காக வேலைக்கு வந்து இருக்கேன் படிப்பை எல்லாம் நிறுத்திவிட்டேன் என்று சொன்னேன். 

அதற்கு அவர், நான் 15 நாள் இங்கே இருப்பேன், நீ வந்து என்னுடன் ஒத்துழைச்சா கல்யாணத்துக்கு என்ன நகையோ அதை எல்லாம் செட்டில் பண்ணுறேன் என்று சொன்னார். 

எனக்கு அப்படி சொன்னதும் அதிர்ச்சியாகி, ஏன் அப்படி கேட்டார் என்று நினைத்திருந்தேன். அதன்பின் என்னிடம் அவர் நெருங்க நினைத்தார், கதவை பூட்டிவிட்டு தப்பிச்சேன். பின் வேறொரு இடத்தில் வேலை வேண்டும் என்று கேட்டு சென்றுவிட்டேன் என்று ரிஹானா தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News