நோ திருமணம், வைத்துக்கொள்கிறேன்னு சொல்வாங்க..பிரேம்ஜி அப்படிப்பட்டவர்தான்!!நடிகை சோனா..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனா, ஸ்மோக் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் சம்பந்தமான சில சிக்கலில் சிக்கிய சோனா, பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் காமெடி நடிகர் பிரேம்ஜி பற்றிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதில், என்னை திருமணம் செய்துக்கொள்ள யாருமே தயாராக இல்லை, மாறாக வைத்துக்கொள்கிறேன் என்றுதான் சொல்வார்கள். முக்கியமாக என்மீது கிளாமர் ஹீரோயின் என்ற இமேஜ் இருப்பதால் தான் அவர்கள் யாரும் திருமணம் செய்துக்கொள்ள மறுக்கிறார்கள் போல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிரேம்ஜி ஒரு பழம், பழம் என்றால் நல்ல பழம். அவர்கள் குடும்பத்தில் அவர் எப்படி பிறந்தார் என்று தெரியவில்லை. உண்மையிலேயே அவர் ரொம்ப ரொம்ப நல்லவர். தாமதமாக திருமணம் செய்துகொண்டாலும், அவர் அவரது மனைவியை நன்றாகத்தான் பார்த்துக்கொள்வார்.
சில ஆண்கள் குடும்பத்தின் மீது அக்கறையாக இருப்பார்கள், அவரும் அந்த மாதிரிதான். பிரேம்ஜி கொஞ்சம் அதிகமாக குடிப்பார்தான், ஆனால் பின் அதை கொஞ்சம் குறைத்துவிட்டார் என்று சோனா தெரிவித்துள்ளார்.