முன்னாடி விட்டுட்டு பின்னாடி அழ கூடாது.. இப்போவே இதை பண்ணுங்க.. ஓப்பனாக கூறிய நடிகை

முன்னாடி விட்டுட்டு பின்னாடி அழ கூடாது.. இப்போவே இதை பண்ணுங்க.. ஓப்பனாக கூறிய நடிகை

பிரபல சீரியல் நடிகை பிரவீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் வாழ்க்கை குறித்த தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, நமக்கு குழந்தைகள் இருக்கிறார்கள், கணவர் இருக்கிறார், மாமியார் இருக்கிறார், அம்மா இருக்கிறார், அப்பா இருக்கிறார், மாமனார் இருக்கிறார், எல்லா உறவுகளும் இருக்கிறது. 

நாம் அவர்களுக்காக வாழ்கிறோம் என்ற பெயரில் நம்முடைய வாழ்க்கையை வாழாமல் விட்டு விடக் கூடாது. நேரத்தை நம்மால் திரும்பப் பெற முடியாது. நம்முடைய வாழ்க்கையை வாழ வேண்டும். நம்முடைய குடும்பத்திற்காக வாழ்கிறோம் என்றாலும் கூட நமக்கான வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

அப்படி வாழாமல் விட்டுவிட்டு பிற்காலத்தில் நான் உனக்காகத்தானே அப்படி எல்லாம் இருந்தேன் உனக்காகத்தானே அப்படி எல்லாம் செய்தேன் இப்போது நீ என்னை இப்படி பேசுகிறாயே உன்னால்தான் என்னுடைய வாழ்க்கையை வீணாக போய்விட்டது உன்னால் நான் என் வாழ்க்கையை வாழாமல் போய்விட்டேன் என்று அழுவதால் எந்த பயனும் இல்லை.

நாம் இழந்துவிட்ட காலத்தை திரும்ப பெற முடியாது. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் எப்போது இருந்தாலும் சரி இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு இன்னொரு வீட்டுக்கு போய்விடுவாள். உண்மை தானே. இதை மாற்ற முடியுமா..? முடியாது..! அப்படி இருக்கும்போது நான் என் மகளுக்காக வாழ்கிறேன் என்று என்னுடைய வாழ்க்கையை நான் வாழாமல் இருக்க மாட்டேன். 

எனக்கு பிடித்த இடங்களுக்கு செல்வேன், எனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவேன், எனக்கு தோன்றக்கூடிய அனைத்து விஷயங்களையும் செய்வேன். அதே நேரம் என்னுடைய குடும்பத்தையும் நான் பார்த்துக் கொள்வேன். நான் எனக்கு பிடித்ததை செய்கிறேன் என்று என்னுடைய குடும்பத்தை கவனிக்காமல் சுற்றுவதற்கு பெயர் வாழ்க்கை கிடையாது. 

நம்முடைய குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். அதே நேரம் நமக்கு பிடித்த விஷயங்களையும் செய்து கொண்டு இருக்க வேண்டும். சிலருக்கு வெவ்வேறு ஊர்களுக்கு செல்வது பிடிக்கும்.. சிலருக்கு பைக்கில் ஊர் சுற்றுவது பிடிக்கும்.. சிலருக்கு புதிய புதிய உணவுகளை சாப்பிடுவதற்கு பிடிக்கும்.. சில பேருக்கு ஷாப்பிங் செல்வது பிடிக்கும்.. சில பேருக்கு படம் பார்ப்பது பிடிக்கும்.. சில பேருக்கு பார்க் பீச் இப்படியான சென்று நேரத்தை கழிப்பது பிடிக்கும்.. இப்படி அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை அவர்கள் வாழவேண்டும். 

அதுதான் அவர்களுடைய வாழ்க்கை. நான் இவருக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டேன் நான் இவளுக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டேன் என்று கூறுவதெல்லாம் ஏற்புடையது கிடையாது. 

இங்கு யாரும் யாருக்காகவும் தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தே ஆக வேண்டும். அப்படி வாழாமல் விட்டுவிட்டு.. பிற்காலத்தில் நான் இவனுக்காக தான் என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்.. நான் இவளுக்காக தான் என் வாழ்க்கையை வாழவில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்று பேசி இருக்கிறார் நடிகை பிரவீனா. 

LATEST News

Trending News