திறமையை பார்த்து அல்ல..என்னோட இதை பார்த்து தான் தனுஷ் வாய்ப்பு கொடுத்தார்..
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன், சாத்தூரில் பிறந்து 16 வயதில் விஜய் டிவியின் "பகல் நிலவு" சீரியல் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானார்.
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த அவர், 19 வயதில் "பிக் பாஸ்" சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் புகழ் பெற்றார். அம்மா இல்லாமல் மூன்று மாதங்கள் தனித்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு பெரிய அனுபவமாக இருந்ததாகவும், அதன் பின் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர் சமீபத்திய யூடியூப் பேட்டியில் தெரிவித்தார்.
ஆனால், நிகழ்ச்சியில் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம் என்கிற வருத்தமும் அவருக்கு உள்ளது. "பிக் பாஸ்" பிறகு, கமல்ஹாசனின் "விக்ரம்" உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தார்.
"வீட்ல விசேஷம்", "டிஎஸ்பி", "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்", "பம்பர்" போன்ற படங்களில் பங்கேற்றாலும், பெரிய அளவிலான வெற்றி கிடைக்கவில்லை. தனுஷ் இயக்கிய "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, என்னுடைய திறமையை பார்த்தெல்லாம் வாய்ப்பு கொடுக்கவில்லை, அவர் மிகப்பெரிய சிவன் பக்தர் எனபதால் என்னுடைய பெயரை பார்த்து தான் தன்னை தேர்ந்தெடுத்ததாக தனுஷ் கூறியதாக ஷிவானி பகிர்ந்தார்.
ஆனால், தவிர்க்க முடியாத சூழலால் அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார், இது அவருக்கு பெரும் வருத்தமாக உள்ளது. காஸ்மெட்டிக் சர்ஜரி குறித்த வதந்திகளுக்கு, "டயட் மற்றும் உடற்பயிற்சியால் தான் மாறினேன், அறுவை சிகிச்சை செய்யவில்லை" என தெளிவுபடுத்தினார்.
சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஏன் என்கிற கேள்வி எழுந்ததால், படிப்பிற்காக சில ஆண்டுகள் படங்களை தவிர்த்ததாகவும், விரைவில் லண்டனுக்கு சென்று செட்டில் ஆக முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
4 மில்லியனுக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ரசிகர்களைக் கொண்ட ஷிவானி, சினிமாவில் இருந்து விலகி புதிய பாதையை தேர்ந்தெடுத்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு சின்னத்திரை நட்சத்திரமாக தொடங்கி, "பிக் பாஸ்" மூலம் புகழ் பெற்று, சினிமாவில் சிறிது காலம் பயணித்த ஷிவானி, இப்போது படிப்பிற்காக லண்டனை நோக்கி பயணிக்கிறார். அவரது இந்த முடிவு, புதிய தொடக்கத்திற்கான தைரியமாகவே பார்க்கப்படுகிறது.