என்ன.. இப்படி காஞ்சிபோயி கிடக்குறீங்க..? - சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி காட்டம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அவரை பார்த்து ஒருவர், "நீங்க என்ன மாடா என் மனதை இப்படி மேய்க்கிறீர்களே?" என்று கேட்கிறார்.
அதற்கு பிரியங்கா நல்காரி, "நீங்க என்ன புல்லா..? இப்படி காஞ்சி போய் கிடக்கிறீங்களே?" என்று தெனாவெட்டாக பதிலளிக்கிறார்.
இந்த கலகலப்பான வசனங்கள் இடம்பெற்றுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.
பிரியங்கா நல்காரியின் இந்த நகைச்சுவையான பதில் அவரது ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது என்று கூறலாம்.