பெரிய நடிகரின் மகளை நாசம் செய்த உறவினர்கள்.. கப்சிப் ஆன நடிகர்.. அப்புறம் என்ன ஆச்சு..?

பெரிய நடிகரின் மகளை நாசம் செய்த உறவினர்கள்.. கப்சிப் ஆன நடிகர்.. அப்புறம் என்ன ஆச்சு..?

பெண்களுக்கு அவரவர் சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி இன்றும் தொடர்கிறது. தங்களை கடுமையானவர்களாக காட்டிக்கொள்ளும் பெண்களிடம் காரணம் கேட்டால், அதுதான் ஆண்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் வழி என்கிறார்கள். 

அந்த அளவிற்கு பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், பிரபல மூத்த நடிகர் மற்றும் அரசியல்வாதி ஒருவரின் மகளே தனது குழந்தை பருவத்தில் உறவினர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும், அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் அவர்களை சுரண்டுவதும் தொடர்கதையாகி வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகைகள் பலர் வெளிப்படையாக பேசினாலும், தங்களுக்கு யார் தொல்லை கொடுத்தார்கள் என்பதை மட்டும் அவர்கள் குறிப்பிடுவதில்லை. 

இது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மலையாள சினிமாவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி தலைமையில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் விளைவாக சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில், தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவரின் மகள் தனது குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லை அனுபவித்ததாக கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அந்த நடிகை, தனது பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால் பெரும்பாலும் உறவினர்கள் வீட்டில் தான் விடப்படுவார் என்றும், அப்போது ஐந்து முதல் ஆறு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கண்ணீர் விட்டு அழுதபடி தெரிவித்தார். 

பெரிய நடிகரின் மகளே இவ்வாறு கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இந்த சம்பவம், பிரபலங்களின் குடும்பத்திலேயே இப்படியான கொடுமைகள் நடப்பது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

LATEST News

Trending News