ஜட்டியில் அதை பண்ணி.. கெட்ட வார்த்தையில் திட்டி.. டார்ச்சர்..! - பிரபல இயக்குனர் குறித்து நடிகை சோனா
நடிகை சோனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அவர் கூறியதாவது, மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். மிகப்பிரபலமான இயக்குனர். ஆனால், என்னிடம் எப்போதுமே நல்லவிதமாகத் தான் பேசுவார். என்னம்மா பண்ற.. சாப்டியா..? இதுபோன்று அன்பாகத்தான் பேசுவார்.
அவருடைய பார்வை கூட தவறான கோணத்தில் என்னை பார்த்தது கிடையாது. அப்படி இருந்த அந்த இயக்குனர் செய்த வேலை என்ன..? என்று எனக்கு படப்பிடிப்பு தொடங்கி ஒரு வாரம் கழித்து தான் தெரிந்தது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த சில நடிகர்கள் என்னை ஒரு விதமாக பார்த்தார்கள். அவர்களுடைய பார்வையை நமக்கு புரியும் அல்லவா.. நம்மை என்ன நோக்கத்தில் பார்க்கிறார்கள் என்று.. என்னை ஒரு விதமாக பார்த்தார்கள்.
எனக்கு புரியவில்லை. திடீரென அந்த இயக்குனர் என்னிடம் வந்து என்ன சோனா.. நேத்து நைட்டு நான் போன் அடிச்சேன.. எடுக்கவே இல்லை என்று கேட்டார்.
நான் அவரை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று நினைத்து நான் என்னுடைய ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அதனால் தான் எடுக்க முடியவில்லை என அவரை தட்டிக் கழித்தேன்.
சரி, என்று அங்கிருந்து அவர் நகர்ந்து சென்றார். அவர் நகர்ந்து சென்றதும் கெட்ட வார்த்தையில் அவரை திட்டினேன். அதை, அவர் கேட்கவில்லை. ஆனால், அருகில் இருந்த இன்னொரு நடிகர் அதனை கேட்டு விட்டார்.
என்ன மேடம் இப்படி திட்டுறீங்க.. அப்படினா..உங்களுக்கும் அவருக்கும் எதுவும் இல்லையா..? என்று கேட்டார். நான் அதிர்ந்து போய் விட்டேன். எனக்கும் அவருக்கும் என்ன இருக்கிறது..? என்று கேள்வி எழுப்பினேன்.
அப்போது அந்த நடிகர் சொன்ன விஷயங்கள் என்னை அதிர வைத்தது. அவர் அந்த படத்தில் சில புதுமுக நடிகர்களை ஒப்பந்தம் செய்திருந்தார். புதுமுக நடிகர்கள் என்றாலும் பெரிய பணக்கார வீட்டு பசங்க.
அவர்களுடன் அறையில் அமர்ந்து கொண்டு... ஒருவனை சட்டையை அயர்ன் செய்ய சொல்வது.. ஒருவனிடம் பேண்டை அயர்ன் செய்ய சொல்வது.. அனைத்தையும் போட்டுக் கொண்டு.. ஜட்டியில் கூட சென்ட் அடித்து கொண்டு.. சோனா எப்போ வேணாலும் கூப்டுவாடா.. நான் ரெடியா இருக்கணும்.. என்று அந்த புதுமுக நடிகர்களிடம் எனக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது போல பாவலா செய்திருக்கிறார்.
நான் இப்படி அவரை திட்டியதை பார்த்ததும் அந்த நடிகர் உண்மையை தெரிந்து கொண்டார். ஒரு வேலை நான் அவரை திட்டாமல் இருந்திருந்தால் நானும் அந்த இயக்குனரும் தொடர்பில் இருந்தோம் என்று எல்லோரும் நம்பி இருப்பார்கள். இதுபோல பல கூத்துகள் நடந்திருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகை சோனா.