நரக வேதனை..! அவர் கூட நடிக்க அதை பண்ணனும்.. நானே அனுவச்சிருக்கேன்..! நடிகை கதறல்..!
"வெயில்", "தீபாவளி", "அசல்" போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எதிரி" படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மற்றும் "ஸ்நேக் பாபு" கதாபாத்திரம் குறித்து பல வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார்.
வடிவேலுவின் அட்டகாசமான நடிப்பை நினைவுகூர்ந்த பாவனா, அந்த தருணங்களை இன்றைக்கும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
பாவனா 15 வருடங்களுக்குப் பிறகு "தி டோர்" படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும், "தீபாவளி" படத்தில் அவர் நடித்த சுசி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
"அசல்" படத்திற்குப் பிறகு மலையாளம் மற்றும் கன்னட படங்களில் கவனம் செலுத்திய அவர், தனது வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவிட்டு தற்போது மீண்டும் தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
"தி டோர்" படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் பாவனா, தமிழ் சினிமாவில் அறிமுகமானது குறித்து சுவாரஸ்யமாக பேசியுள்ளார். "முதலில் நான் 'சித்திரம் பேசுதடி' படத்தில் நடித்தாலும், அதற்கு முன்பே எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.
ஆனால், நான் தான் தமிழில் நடிக்க தயங்கினேன். மிஷ்கின் சார் என்னை தேடி திருவனந்தபுரம் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் கதை சொல்ல சொல்ல எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த கேரக்டர் எனக்கு பிடிச்சதால நடிக்க ஓகே சொன்னேன்.
என் அப்பா கொஞ்சம் தயங்கினார். நான்தான் அவரிடம் பேசி புரிய வைத்து நடிச்சேன். அதன் பிறகு தான் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் நான் தமிழில் அறிமுகமானேன்" என்று பாவனா தெரிவித்தார்.
மலையாள திரையுலகின் ஜாம்பவான்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவத்தையும் பாவனா பகிர்ந்து கொண்டார். "மம்முட்டி, மோகன் லால் இவங்க ரெண்டு பேரும் லெஜண்ட்.
அவங்க இரண்டு பேரிடம் நிறைய கத்துக்கலாம். ரொம்ப சின்சியரா இருப்பாங்க. அவங்க கூட நடிக்கும் போது ஒரு பள்ளிக்கூடத்தில் பாடம் கத்துக்குற மாதிரி இருக்கும்.
எனக்கு பிடித்த மலையாள இயக்குநர்கள் இப்போ ரொம்ப வியக்க வைக்கும் படங்கள் பண்றாங்க. குறிப்பா கமல், பிரியதர்ஷன், அன்வர் ரஷீத் சார் போன்றோருடன் பணியாற்றியது ரொம்ப ஹேப்பியா இருக்கு" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.
"எதிரி" படத்தில் வடிவேலு ஸ்நேக் பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் பாவனாவை அவர் காதலிப்பது போன்ற காட்சிகள் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இதுகுறித்து பேசிய பாவனா, "படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு கூட நடிக்கணும்னா சிரிப்பை அடக்கிக்கொண்டு நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லனா நெறய டேக் போகும்.. அப்புறம் நரக வேதனை தான்.. என கூறி பயமுறுத்தினார்கள்.
அவர்கள் சொன்னது உண்மை தான். ஒரு காட்சியில் அவர் கையை வச்சுக்கிட்டு 'ஸ்நேக் பாபு.. ஸ்நேக் பாபு'ன்னு சொல்லும் போது எனக்கு பயங்கரமா சிரிப்பு வந்தது.
சிரிக்காம டேக் வாங்குறது ரொம்ப கஷ்டம். நான் மாதவனை ரவுடியா மாத்த ட்ரை பண்ணுவேன். அப்ப இவர் பண்றதெல்லாம் பார்த்து எனக்கு கோபம் வரணும். ஆனா அவர் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. கையை ஸ்நேக் மாதிரி நீட்டி பேசி வந்தார்."
"அதுல 'எதுடா உன்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுச்சு'ன்னு கேட்கும் மாடுலேஷன்ல பார்த்தப்ப சிரிப்பை அடக்கவே முடியலை. குபீர்ன்னு சிரிச்சிட்டேன்.. அடுத்த டேக்ல தான் ஓகே ஆச்சு.. அய்யோ அவர் மாதிரி காமெடி பண்ண முடியாதுங்க" என்று பாவனா வடிவேலுவின் நகைச்சுவை திறமையை வியந்து பேசினார்.
இந்த காமெடி கொரோனா ஊரடங்கு சமயத்தில் மிகவும் ட்ரெண்டானது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இப்போதும் ரசிகர்கள் அந்த காமெடியை பார்த்து சிரிப்பதாகவும், அது குறித்து தன்னிடம் கேட்பதாகவும் அவர் கூறினார். மேலும், வடிவேலு போலவே அந்த வசனத்தை பேசி காண்பித்தார். "அவர் ரொமான்ஸ் பண்ணனும், நான் அவர்கிட்ட துப்பாக்கியை காட்டி பயமுறுத்தணும். செம சேலஞ்ச் தான் அது" என்று பாவனா அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை நினைவுகூர்ந்தார்.
வடிவேலுவுடனான தனது அனுபவங்களை பாவனா மிகவும் சந்தோஷத்துடனும், நகைச்சுவையுடனும் பகிர்ந்து கொண்டது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.