ஆபாச உடை அணிந்து, வயசை குறைத்து என் புருஷனை.. - மதுரை முத்து மனைவி பரபரப்பு வீடியோ

ஆபாச உடை அணிந்து, வயசை குறைத்து என் புருஷனை.. - மதுரை முத்து மனைவி பரபரப்பு வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. ஒரு போட்டியாளராக கலக்கிய அவர் தற்போது அதே நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். 

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவை கலைஞராக கலக்கி வரும் மதுரை முத்துவின் முதல் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

தனது மனைவி, அப்பா, அம்மா ஆகியோருக்காக கோவில் கட்டி விரைவில் கும்பாபிஷேகம் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். முதல் மனைவி இறந்த பிறகு, மதுரை முத்து நீத்தி என்ற மருத்துவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், சமீபத்தில் மதுரை முத்துவின் மனைவி நீத்தி ஒரு வீடியோவில் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் நீத்தி கூறியதாவது, "சில பெண்கள் ஆபாசமான உடை அணிந்து தங்களின் வயதை குறைத்துக்காட்டி ஆண்களை இழுக்கிறார்கள். இப்படி கணவரை திருட பார்ப்பவர்களிடம் இருந்து உஷாராக கணவரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் கூறியுள்ளார். 

நீத்தியின் இந்த கருத்து பலதரப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒரு சிலர் அவர் கூறியதில் நியாயம் இருப்பதாக கருத்து தெரிவிக்க, பலர் இது ஒரு பெண்ணை குறைத்து மதிப்பிடும் கருத்து என்றும், உடை என்பது தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறி வருகின்றனர். 

மேலும், கணவன் மனைவிக்கிடையேயான நம்பிக்கை மற்றும் புரிதல் தான் முக்கியம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மதுரை முத்துவும், அவரது மனைவி நீத்தியும் இந்த கருத்து குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

நீத்தியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News