அமீர் கான் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு.. பிறந்தநாளில் வெளியான போட்டோ
நடிகர் அமீர் கான் ஹிந்தியில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தான் அமீர் கானை சந்தித்த போது எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அவருடன் பேசியது ஊக்கமளித்ததாகவும் கூறி இருக்கிறார்.
ரஜினியை வைத்து லோகேஷ் அடுத்து இயக்கும் கூலி படத்தில் அமீர் கான் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.