ஏமாந்த மீனாவிற்கு அண்ணாமலை கொடுத்த யோசனை... இனி சிக்குவாரா, சிறகடிக்க ஆசை புரொமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம் அமைந்து வருகிறது.
இந்த வாரத்திற்கான புரொமோவில், மீனா பெரிய ஆர்டர் எடுத்து டெகரேஷன் செய்தார், கையில் இருக்கும் பணம், கடன் வாங்கி மண்டப வேலையை செய்துள்ளார். ஆனால் மண்டப நபர் பணம் கொடுத்துவிட்டேன் என கூற கடும் ஷாக் ஆகிறார் மீனா.
பணத்தை எப்படி பெறுவது என குழப்பத்தில் மீனா இருக்க இந்த விஷயம் தெரிந்து விஜயா சந்தோஷத்தில் ஆடுகிறார்.
பின் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், பணத்தை ஏமாந்த மீனாவிற்கு அண்ணாமலை ஒரு யோசனை கொடுக்கிறார். அவர் சொன்னதை வைத்து மீனா பணத்தை திருப்பி எப்படி வாங்குவது என யோசிக்கிறார்.