90ஸ் க்ரஷ் கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் இர்பான் புதிய தொடர்.. எந்த தொலைக்காட்சி தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் 90களில் நிறைய ஹிட்டான தொடர்கள் அதுவும் இளைஞர்களை கவரும் வண்ணம் அதிகம் வந்துள்ளது.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடர் தான் கனா காணும் காலங்கள், பள்ளி பருவ காலத்தில் நடக்கும் சந்தோஷமான நாட்களை இந்த தொடர் காட்டியிருந்தது.
கனா காணும் காலங்கள் மூலம் ரசிகர்களின் பேவரெட் நாயகனாக வலம் வந்தவர் தான் இர்பான்.
இந்த தொடருக்கு பின் இவர் பட்டாளம் திரைப்படத்தில் நடித்தார், பிறகு சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
தற்போது இவர் மீண்டும் சின்னத்திரை பக்கம் வர உள்ளார், நாயகனாக புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாராம்.
இவர் நடிக்கப்போகும் புதிய தொடர் ஜீ தமிழில் தான் வரப்போகிறதாம்.