நடிகை ராதிகாவுக்கு அறுவை சிகிச்சை.. மகளிர் தினத்தில் அவரே உடைத்த ரகசியம்
தமிழ் சினிமா கண்ட சிறந்த நடிகைகள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். எம்.ஆர்.ராதா அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர்.
வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்து பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க அடுத்தடுத்து ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். சீரியலில் கலக்கிய ராதிகா இப்போது படங்களில் அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில், ராதிகாவுக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதன் புகைப்படங்களை வெளியிட்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " நான் இரண்டு மாதங்களாக மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். இரண்டு படங்களில் வேலை செய்தேன். அப்போது என் முழங்காலில் அதீத வலி இருந்தது.
வலி நிவாரணி மாத்திரைகள், முழங்கால் பிரேஸ் உள்ளிட்டவைகளை வைத்து சமாளித்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்றானது. அதன்படி, அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்" என்று கூறியுள்ளார்.