அந்த வயசுல ஆண் நண்பர்களிடம் அதை எதிர்பார்த்தேன்.. கூச்சமின்றி கூறிய நடிகை சாய் பல்லவி..!
நடிகை சாய் பல்லவி, தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது அழகு குறித்த அனுபவங்களையும், அதற்காக அவர் பின்பற்றும் சில குறிப்புகளையும் மனம் திறந்து பேசியுள்ளார்.
முகப்பருக்கள் காரணமாக தான் சந்தித்த விமர்சனங்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலையும், பின்னர் தனது தாயின் வார்த்தைகள் தனக்கு எவ்வாறு ஊக்கமளித்தது என்பதையும் அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இயல்பான நடிப்பு மற்றும் அழகு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது அழகு குறித்த தனது எண்ணங்களையும், பிறர் கூறிய விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டார். "என்னை பார்க்கும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், என்னுடைய நண்பர்கள், 'உன் முகத்தில் ஏன் இவ்வளவு பரு இருக்கிறது? குதறி வைத்தது போல இருக்கிறது' என்று கூறுவார்கள்.
அப்படி அவர்கள் சொல்லும் போதெல்லாம் 'நாம் அழகாக இல்லையோ' என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கும்." மேலும் அவர், ஒரு குறிப்பிட்ட வயதில் ஆண் நண்பர்கள் தன்னை அழகாக இருப்பதாக சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இருந்ததாகவும் கூறினார்.
"ஏனென்றால் என்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள், வேறு பெண்களுடன் நிறைய நேரம் பேசுவார்கள். ஆனால் என்னிடம் அதிக நேரம் பேச மாட்டார்கள். ஏனென்றால் என்னுடைய தந்தை மிகவும் கண்டிப்பானவர்.
என்னுடைய தந்தையை பார்த்து பயந்து என்னிடம் பேசாமல் தவிர்த்து விட்டார்கள். அப்போது கூட 'நாம் அழகாக இல்லையோ' என்ற ஒரு யோசனை என் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது," என்று தனது இளமை பருவ எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.
இருப்பினும், சாய் பல்லவிக்கு அவரது தாயார் தொடர்ந்து ஊக்கமளித்து வந்துள்ளார். "ஆனால் தொடர்ச்சியாக என்னுடைய அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், 'நீ அழகாக இருக்கிறாய், நீ அழகாக இருக்கிறாய்' என்று என்னிடம் கூறுவார்," என்று தனது தாய் தனக்கு அளித்த நம்பிக்கையை நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தாயின் இந்த வார்த்தைகள் தான் தனக்கு மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்ததாக சாய் பல்லவி தெரிவித்தார். சாய் பல்லவியின் இந்த வெளிப்படையான பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பலரும் சாய் பல்லவியின் நேர்மையையும், தன்னம்பிக்கையையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சாய் பல்லவி தனது பேட்டியில் குறிப்பிட்டது போல, பெற்றோர்களின் ஊக்கமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த ஒரு சவாலையும் சமாளிக்கலாம் என்பதை இது உணர்த்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.