மாற்றி மாற்றி பேசி மாட்டிகொண்ட கயாடு லோஹர்..

மாற்றி மாற்றி பேசி மாட்டிகொண்ட கயாடு லோஹர்..

இன்றைய தேதியில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் கயாடு லோஹர். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்துள்ளது. அடுத்ததாக அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கயாடு லோஹரிடம் "உங்களுடைய Celebrity Crush யார்" என கேள்வி கேட்டனர்.

 

மாற்றி மாற்றி பேசி மாட்டிகொண்ட கயாடு லோஹர்.. வைரலாகும் வீடியோ | Kayadu Lohar Talk About Actors Viral Video

இதற்கு பதிலளித்த கயாடு லோஹர் "தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush" என கூறினார். மேலும் "விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது தெறி தான்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், ரசிகர்களுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில், "உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்" என ரசிகர் கேள்வி கேட்க, "தனுஷ் தான் எனக்கு பிடிக்கும், வேறு யாருக்கும் இடமில்லை" என நடிகை கயாடு லோஹர் கூறியுள்ளார். இதை கவனித்த நெட்டிசன்கள் மாற்றி மாற்றி பேசி கயாடு லோஹர் மாட்டிக்கொண்டார் என கூறி வருகிறார்கள்.

மாற்றி மாற்றி பேசி மாட்டிகொண்ட கயாடு லோஹர்.. வைரலாகும் வீடியோ | Kayadu Lohar Talk About Actors Viral Video

LATEST News

Trending News