என் இடுப்பை தடவினால்.. அந்த உறுப்பை கோழி கழுத்தை புடிக்கிற மாதிரி பிடிச்சு இதை பண்ணுவேன்.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!
பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்கள் அணியும் ஆடைகள் மற்றும் அது தொடர்பான விமர்சனங்கள் குறித்தும் நடிகை ரேகா நாயர் தனது தனிப்பட்ட பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணிவது ஆண்களை தவறான எண்ணங்களுக்கு தூண்டி, அதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
பெண்களே கூட சில சமயங்களில், கவர்ச்சியான ஆடைகள் அணிவதாலேயே பிரச்சனைகள் வருகின்றன என கருதுகின்றனர். இந்நிலையில், நடிகை ரேகா நாயர் இந்த விவகாரம் குறித்து துணிச்சலான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.
பொதுவாக ஆண்கள், பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணியும் போது உணர்ச்சிவசப்பட்டு தவறாக நடக்க தூண்டப்படுகிறார்கள் என்றும், பெண்களின் கவர்ச்சி உடைகளே இதற்கு காரணம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
பெரும்பாலான பெண்களும் கூட இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் நடிகை ரேகா நாயர் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார்.
ரேகா நாயர் கூறுகையில், "நீ உன்னுடைய மார்பு தெரிவது போலவோ, இடுப்பு தெரிவது போலவோ, தொடை தெரிவது போலவோ உடையை அணிந்து கொள்கிறாய், அது என்னுடைய சுதந்திரம் என்கிறாய்.
அப்படி என்றால், அப்படி உடை அணிந்து செல்லும் பொழுது தவறான அணுகுமுறைக்கு உள்ளானால், ஒருவேளை பேருந்தில் கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டிருக்கும் போது ஒரு நபர் உங்களுடைய இடுப்பை தடவினால், அந்த நபரின் கழுத்தை கோழியின் கழுத்தை பிடித்து தூக்கி வெளியே வீசுவது போன்ற செயலை உங்களால் செய்ய முடியும் எனும்போது அந்த உடையை நீங்கள் அணிய வேண்டும்," என்று ஆணித்தரமாக கூறினார்.
மேலும் அவர், "இப்படி அங்கங்கள் வெளியே தெரிவது போன்ற உடை அணிந்து சென்றால் இப்படியான தொந்தரவுகள் வரும் என தெரிந்து கவர்ச்சியான ஆடை அணிவது என்னுடைய சுதந்திரம் என்று சொல்லும் பெண்கள், அப்படி தங்களிடம் அத்துமீறும் ஆண்களை தாக்குவதற்கும் தயங்கக் கூடாது.
அப்படி தயங்கக்கூடிய பெண்கள் இப்படி ஆடைகளை அணியாமல் இருக்க வேண்டும். நான் கவர்ச்சியான ஆடையையும் அணிகிறேன், அதேசமயம் என்னிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்களை திருப்பி தாக்க மாட்டேன் என்ற தைரியம் இல்லை என்றால் அப்படியான ஆடைகளை அணிவதற்கும் உங்களுக்கு தகுதி இல்லை.
இதைத்தான் நான் பல போட்டிகளில் பதிவு செய்து வருகிறேன்," என்று அழுத்தமாக தெரிவித்தார். தனது கருத்தை மேலும் விளக்கும் விதமாக, "இப்போது நான் கவர்ச்சியான ஆடை அணிந்து செல்கிறேன்... ஒன்றும் வேண்டாம், புடவை அணிந்து பேருந்தில் செல்கிறேன், பேருந்தில் நின்று கொண்டு மேலே உள்ள கம்பியை பிடித்து நிற்கிறேன் என்றால் என்னுடைய இடுப்பு தெரியும், என்னுடைய மார்பின் அழகு தெரியும்.
அந்த நேரத்தில் யாராவது என்னுடைய இடுப்பை தாவினார்கள் என்றால், அந்த நபரின் கழுத்தை கோழியின் கழுத்தைப் பிடிப்பது போல பிடித்து வெளியே தூக்கி வீசுவேன். இந்த தைரியம் எனக்கு இருக்கிறது.
இந்த தைரியம் உங்களுக்கும் இருந்தால் நீங்கள் எந்த விதமான ஆடையை வேணாலும் அணிந்து செல்லலாம். உங்களுடைய பாதுகாப்புக்கு நீங்களே முதல் பொறுப்பு," என்று பெண்களின் தற்காப்பு உரிமையை வலியுறுத்தினார்.
ரேகா நாயரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அவரது இந்த பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களின் ஆடை சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை ஒரே நேர்கோட்டில் வைத்து அவர் பேசியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.