கோலிவுட்டுக்கு வர வாய்ப்பே இல்லையா?.. நடிகை ஜோதிகா உடைத்த ரகசியம்
தமிழில் சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.
பின் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். தற்போது, டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பேட்டிகளில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "பாலிவுட் சினிமாவில் தான் முதலில் படம் நடித்தேன் அப்போது படம் நல்ல வரவேற்பு பெறவில்லை. அதன்பின், தமிழ் சினிமா பக்கம் வந்தேன்.
தமிழக மக்கள் என்னை ஏற்று கொண்டார்கள். நான் ஒரு நடிகையாக வளர வேண்டும் என்பதற்காக தான் மொழி மாறினேன்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவர் கண்டிப்பாக தமிழ் படங்களிலும் நடிப்பார் என்று தெரிய வருகிறது.