ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த பெரிய ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..!
சினிமாவை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரபல ஹீரோவாக இருந்துவிட்டு பின்ன தொடர் வெற்றிகளில் நடித்துவிட்டு வெற்றிகள் மளமளவேன குவிந்து சம்பளம் அதிகமாகிவிட்டால்,
ஹீரோக்களுக்கு கொஞ்சம் திமிர் ஜாஸ்தியாகி விடும். அப்படித்தான் படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது, அதிக சம்பளம் கேட்டு சைன் பண்ண படத்தில் இருந்து விலங்குவது என,
தொடர்ந்து பட குழுவிற்கு ஒத்துழைக்காமல் சூட்டிங் வராமல் இருப்பது என இப்படி பல தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் அந்த பிரபல ஹீரோ உச்சத்தை தொட்டு பிரபலமான நடிகராக மார்க்கெட் பிடித்து விட்ட பின்னர் அவர்களை நம்பி பல தயாரிப்பாளர்களும் இயக்குனர் இயக்குனர்களும்,
புதிய படத்தை புக் செய்துவிட்ட பின்னர் தன்னுடைய வேலையை காட்டுகிறாராம். ஆம் எப்போதும் படப்பிடிப்புகளில் குடியும் கூத்துமாக இருக்கும் அந்த நடிகர் கேரவனிலே பீர் பாட்டில் கையோடு வைத்து சுத்தி கொண்டிருக்கிறாராம்.
ஷார்ட் முடிந்துவிட்டது போதும் வாங்கள் என்று சொன்னவுடன் அவரது உதவியாளர்கள் சரக்கு பாட்டில் . மற்றும் கிளாஸ் உடன் வந்து நிற்கிறார்களாம்.
அந்த அளவுக்கு சரக்கு கூடவே வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார் அந்த நடிகர். இதனால் அவர் உடலும் தொந்தியும் தொப்பையுமாக ஆகிவிட்டதாம்.
ஸ்டார் ஹீரோ, நட்சத்திர நடிகர் இவரை வைத்து படம் எடுத்தால் கோடியில் பணம் சம்பாதிக்கலாம் என நம்பி இறங்கும் தயாரிப்பாளர்களின் தலையில் துண்டை போட்டு வருகிறார் அந்த பிரபல ஹீரோ.
இவரை நம்பி படம் எடுத்தால் நன்றாக ஓடும் என நம்பிக்கையுடன் எடுக்க முன்வந்து படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அவரது உடலை குறைத்து சிக்ஸ்பேக் உடன் காட்டுவதற்காகவே,
சிஜியில் 30 கோடி ரூபாய் செலவழித்து வருகிறார்களாம். இதை கேட்டு இவருக்காக இவ்வளவு செலவு பண்ணி இப்படி படத்தை எடுக்கணுமா என தயாரிப்பாளரே யோசித்து வருகிறாராம்.
சூப்பர் ஸ்டார் ஹீரோக்களே கிட்டத்தட்ட 70 வயதை நெருங்கியும் கூட கெத்தான ஹீரோவாக ஸ்லிம் தோற்றத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில்,
இந்த இளம் ஹீரோ அடாவடித்தனத்தால் தனது உடம்பையும் கெடுத்துக் கொண்டு தான் கெடுப்பது மட்டுமில்லாமல் தன்னை சார்ந்த படக் குழுவினரையும் கெடுத்து,
அவர்களது வாழ்க்கையில் மண்ணள்ளி போடுகிறார். இப்படிபட்ட நடிகர் படம் சைன் பண்ணுவதற்கு முன்பே என்னால் முடியாது உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என தடாலடியாக கூறிவிட்டால்,
அவர்கள் வாழ்க்கையாவது மிஞ்சும் இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறாரே இந்த நடிகர்…
இவரை அடக்குவது யாரால் தான் முடியும்? இனிமேலாவது திருந்துவரா என எல்லோரும் புலம்பி தள்ளுகிறார்களாம் கோலிவுட்டில்.