எனக்கு சங்கடமாக இருந்தது.. கவின் திருமணம் பற்றி பேசிய லாஸ்லியா

எனக்கு சங்கடமாக இருந்தது.. கவின் திருமணம் பற்றி பேசிய லாஸ்லியா

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் அந்த ஷோவில் கவின் உடன் காதலில் இருந்தார். ஆனால் ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர்.

இருவரும் சினிமா கெரியரில் பிசியாக இருந்தனர். சில காலத்திற்கு பிறகு கவின் திருமணம் செய்துகொண்டார். அப்போது லாஸ்லியாவை பலரும் விமர்சித்தனர்.

 

சங்கடமாக இருந்தது

அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் லாஸ்லியா. தற்போது ஜென்டில்வுமன் என்ற படத்தில் லாஸ்லியா நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் தான் லாஸ்லியாவிடம் அது பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது.

"நான் எதாவது புகைப்படங்கள் பதிவிட்டால், நான் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தபோது, கவின் பற்றி கேள்வி கேட்டதால் எனக்கு அது சங்கடமாக இருந்தது."

"அவர் ஒரு குடும்பத்திற்குள் சென்றுவிட்டார். அவரை திருமணம் செய்திருக்கும் பெண் குடும்பத்தினர் அதை பார்க்கும்போது அது நன்றாக இருக்காதே என்கிற எண்ணம் என்னிடம் இருந்தது."

"அது சம்மந்தமாக கேள்விகள் வரும்போது நான் முடிந்தவரை பதில் கூறினேன். ஆனால் அதை தாண்டி பலர் அதை பற்றியே கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்ததால் 'வேண்டாம்..இது போதும்' என கூறினேன்."

"நான் பேசும் விஷயம் இன்னொருவரின் வாழ்க்கையில் எதாவது பிரச்னையை உருவாக்கலாம், அது கூடாது என்பது என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது" என லாஸ்லியா கூறி இருக்கிறார்.

 

LATEST News

Trending News