ஷூட்டிங்கில் விபத்து!! கால் கட்டுடன் பிக்பாஸ் நடிகை ஜனனி.. வீடியோ..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் இலங்கை பெண் ஜனனி.
இலங்கை தொலைக்காட்சியில் பணியாற்றி பின் பிக்பாஸ் 6ல் கலந்து கொண்ட ஜனனி, அதன்பின் விஜய்யின் லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.
நிழல் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வரும் ஜனனிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம்.
காலில் கட்டுடன் எடுத்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.